கோவில் 1296 - விருதுநகர் பசும்பொன்புரம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1296
சிக்கல்கள் தீர்க்கும் விருதுநகர் பசும்பொன்புரம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
25.12.24 புதன்
அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
பசும்பொன்புரம்
விருதுநகர் 626004
விருதுநகர் வட்டம்
விருதுநகர் மாவட்டம்
இருப்பிடம்: விருதுநகர் 13 கிமீ, அருப்புக்கோட்டை 16 கிமீ, சாத்தூர் 25 கிமீ, சிவகாசி 35 கிமீ, மதுரை 62 கிமீ, திருமங்கலம் 42 கிமீ
மூலவர்: பாலசுப்பிரமணிய சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல மகிமை:
விருதுநகர் மாநகர பேருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவில் இருக்கும் பசும்பொன்புரம் பகுதியில் சிக்கல்கள் தீர்க்கும் விருதுநகர் பசும்பொன்புரம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. மேலும் அருப்புக்கோட்டை நகரிலிருந்து 16 கிமீ தொலைவு அல்லது சாத்தூர் நகரிலிருந்து 25 கிமீ தொலைவு அல்லது சிவகாசி நகரிலிருந்து 35 கிமீ தொலைவு அல்லது மதுரை மாநகரிலிருந்து 62 கிமீ தொலைவு அல்லது திருமங்கலம் நகரிலிருந்து 42 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் விருதுநகர் மாவட்டம் பசும்பொன்புரம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக அருள்புரிகின்றார். இக்கோவில் கும்பாபிஷேகம் 2023-ல் நடைபெற்றது.
விருதுநகர் பசும்பொன்புரம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு வருடமும் கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை போன்ற திருவிழாக்கள் வெகுச் சிறப்பாகக் கொண்டாடபடுகின்றன. சஷ்டி, கார்த்திகை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன,
தல வரலாறு:
விருதுநகர் பகுதியில் பசும்பொன்புரம் கிராமத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளூர் பக்தர்கள், சான்றோர்களால் எழுப்பப்பட்டது. கோவில் திருப்பணிகள் முடிவுற்று 2023-ம் ஆண்டு கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
தல அமைப்பு:
அழகிய அமைப்புடன் கூடிய இக்கோவில் கருவறையில் மூலவர் விருதுநகர் பாலசுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் பொலிவான தோற்றத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறை எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் கணபதி, சிவபெருமான் உள்ளிட்ட அனைத்து பரிவாரத் தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கார்த்திகை
பிரார்த்தனை:
சிக்கல்கள் தீர, வல்வினைகள் அகல, திருமணம் நடைபெற, குழந்தைப்பேறு வேண்டி, பிணிகள் போக்க, நல்லன அருள, மன மகிழ்ச்சி கிட்ட, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
பால்குடம், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
வல்வினைகள் யாவற்றையும் அகற்றும் விருதுநகர் பசும்பொன்புரம் பாலசுப்பிரமணிய சுவாமியை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூ
🙏🏻🙏🏻
படம் 1 - 1296 சிக்கல்கள் தீர்க்கும் விருதுநகர் பசும்பொன்புரம் பாலசுப்பிரமணிய சுவாமி
Comments
Post a Comment