கோவில் 1295 - விருதுநகர் மல்லிபுதூர் முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1295
மங்கல வாழ்வு தரும் விருதுநகர் மல்லிபுதூர் முருகன் கோவில்
24.12.24 செவ்வாய்
அருள்மிகு முருகன் கோவில்
[அ/மி விநாயகர் கோவில்]
மல்லிபுதூர் 626141
ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்
விருதுநகர் மாவட்டம்
இருப்பிடம்: விருதுநகர் 40 கிமீ, ஸ்ரீவில்லிபுத்தூர் 10 கிமீ, கிருஷ்ணன் கோவில் 13 கிமீ, சிவகாசி 16 கிமீ, ராஜபாளையம் 21 கிமீ, சாத்தூர் 33 கிமீ
மூலவர்: முருகன்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல மகிமை:
விருதுநகர் மாவட்டம் விருதுநகர் பேருந்து நிலையத்திலிருந்து 40 கிமீ தொலைவில் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தில் உள்ள மல்லிபுதூர் கிராமத்தில் மங்கல வாழ்வு தரும் மல்லிபுதூர் முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலிருந்து 10 கிமீ தொலைவு அல்லது கிருஷ்ணன் கோவில் நகரிலிருந்து 13 கிமீ தொலைவு அல்லது சிவகாசி நகரிலிருந்து 16 கிமீ தொலைவு அல்லது ராஜபாளையம் நகரிலிருந்து 21 கிமீ தொலைவு அல்லது சாத்தூர் நகரிலிருந்து 40 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் விருதுநகர் மாவட்டம் மல்லிபுதூர் முருகன் கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவர் முருகன் வள்ளி, தெய்வானையுடன் அருளாட்சி செய்கின்றார். இக்கோவிலின் கும்பாபிஷேகம் 2024 பிப்ரவரியில் நடைபெற்றது.
மல்லிபுதூர் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி பெருவிழா விமரிசையாக நடைபெறும். கந்த சஷ்டி திருவிழாவில் தினசரி சிறப்பு தீபாரதனைகள் நடக்கின்றன. மேலும் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகனின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாக ந்டைபெறுகின்றன. சஷ்டி, கார்த்திகை திருநாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன
தல வரலாறு:
மல்லிபுதூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள பக்தர்கள் மற்றும் புரவலர்கள் பேருதவியுடன் கோவில் எழுப்பப்பட்டது. இக்கோவில் கும்பாபிஷேகம் 2024 பிப்ரவரியில் சிறப்பாக நடைபெற்றது.
தல அமைப்பு:
அழகிய சிறபங்களுடன் கூடிய இக்கோவில் கருவறையில் மூலவர் முருகன் நின்ற திருக்கோலத்தில் கையில் வேல் ஏந்தி வள்ளி, தெய்வானை சமேதராக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். முருகப்பெருமானுக்கு எதிரில் மயில் மற்றும் பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், உற்சவ பெருமான், சிவபெருமான், அம்பாள், சண்டிகேஸ்வரர், பெருமாள், நவக்கிரகங்கள் உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் இக்கோவிலில் தனித் தனி சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கார்த்திகை
பிரார்த்தனை:
மங்கல வாழ்வு பெற்றிட, திருமணத் தடை அகல, குழந்தைப்பேறு உண்டாக, கேட்ட்து கிடைக்க, பிணிகள் போக்க, தொழில் சிறக்க, நோய்கள் குணமாக, எடுத்த காரியங்கள் வெற்றியடைய
நேர்த்திக்கடன்:
பால்குடம், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திருமணத் தடை அகல அருளும் விருதுநகர் மல்லிபுதூர் முருகனை போற்றித் தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1295 மங்கல வாழ்வு தரும் விருதுநகர் மல்லிபுதூர் முருகன்
Comments
Post a Comment