கோவில் 1294 - விருதுநகர் அருப்புக்கோட்டை பழனி ஆண்டவர் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1294

தீமைகளை நீக்கியருளும் விருதுநகர் அருப்புக்கோட்டை பழனி ஆண்டவர் கோவில்

23.12.24 திங்கள்


அருள்மிகு பழனி ஆண்டவர் கோவில்

P. புளியம்பட்டி [பெரிய புளியம்பட்டி]

அருப்புக்கோட்டை 626101

அருப்புக்கோட்டை வட்டம்

விருதுநகர் மாவட்டம்

இருப்பிடம்: விருதுநகர் 17 கிமீ, அருப்புக்கோட்டை பே. நி. 1.6 கிமீ, சாத்தூர் 40 கிமீ, மதுரை 56 கிமீ, சிவகாசி 44 கிமீ


மூலவர்: பழனி ஆண்டவர்

கும்பாபிஷேகம்: 10.02.2016


தல மகிமை:

விருதுநகர் மாவட்டம் விருதுநகர் பேருந்து நிலையத்திலிருந்து 17 கிமீ தொலைவில் உள்ள அருப்புக்கோட்டை நகரில் இருக்கும் P. புளியம்பட்டி பகுதியில் தீமைகளை நீக்கியருளும் அருப்புக்கோட்டை P. புளியம்பட்டி பழனி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. மேலும் அருப்புக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து 1.6 கிமீ தொலைவு அல்லது சாத்தூர் நகரிலிருந்து 40 கிமீ தொலைவு அல்லது மதுரை மாநகரிலிருந்து 56 கிமீ தொலைவு அல்லது சிவகாசி நகரிலிருந்து 44 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை P. புளியம்பட்டி பழனி ஆண்டவர் கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவர் பழனி ஆண்டவர் கையில் தண்டம் ஏந்தி அருள்புரிகின்றார். இக்கோவிலின் கும்பாபிஷேகம் 10.02.2016-ல் சிறப்பாக நடந்தேறியது.


அருப்புக்கோட்டை P. புளியம்பட்டி பழனி ஆண்டவர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம் திருவிழா சிறப்பு தீபாரதனைகளுடன் விமரிசையாக நடைபெறுகிறது. மேலும் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் திருவிழாக்களும் வெகுச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கார்த்திகை நன்னாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.


தல வரலாறு:

அருப்புக்கோட்டை வாழ் சாலியர் சமூகத்தினரால் பழனி ஆண்டவர் கோவில் கட்டப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 10.02.2016-ல் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.


தல அமைப்பு:

அழகிய கோபுரத்துடன் கூடிய இக்கோவில் கருவறையில் மூலவர் பழனி ஆண்டவர் கையில் தண்டம் ஏந்தி நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சியருளி பழனி தண்டாயுதபாணியை போல ஆற்றலுடன் அருள்பாலிக்கின்றார். உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், சஞ்சீவி விநாயகர், சிவபெருமான், மாகாளியம்மன், ஆயிரங்கண் மாரியம்மன் உட்பட அனைத்து தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கார்த்திகை


பிரார்த்தனை:

தீமைகள் நீங்க, கல்வி, ஞானம் மேம்பட, விருப்பங்கள் நிறைவேற, வியாபாரம், தொழில் விருத்தியடைய, திருமணம் வேண்டி, குழந்தை பாக்கியம் கிட்ட, மன நிம்மதி கிடைக்க், தோஷங்கள் விலக


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


கல்வி, ஞானம் மேம்பட அருளும் விருதுநகர் அருப்புக்கோட்டை பழனி ஆண்டவரை பணிந்து வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1294 தீமைகளை நீக்கியருளும் விருதுநகர் அருப்புக்கோட்டை பழனி ஆண்டவர்


படம் 2 - 1294 கல்வி, ஞானம் மேம்பட அருளும் விருதுநகர் அருப்புக்கோட்டை பழனி ஆண்டவர் கோவில் உற்சவ மூர்த்திகள்



Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்