கோவில் 1293 - விருதுநகர் அருப்புக்கோட்டை வடிவேல் முருகன் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1293

செல்வம் செழிக்க அருளும் விருதுநகர் அருப்புக்கோட்டை வடிவேல் முருகன் கோவில்

22.12.24 ஞாயிறு


அருள்மிகு வடிவேல் முருகன் கோவில்

[அ/மி பெரியாண்டவர் கோவில்]

P. புளியம்பட்டி [புளியம்பட்டி/பெரிய புளியம்பட்டி]

அருப்புக்கோட்டை 626101

அருப்புக்கோட்டை வட்டம்

விருதுநகர் மாவட்டம்

இருப்பிடம்: விருதுநகர் 18 கிமீ, அருப்புக்கோட்டை பே. நி. 1 கிமீ, சாத்தூர் 42 கிமீ, மதுரை 58 கிமீ, சிவகாசி 44 கிமீ


மூலவர்: வடிவேல் முருகன்

தேவியர்: வள்ளி, தெய்வானை


தல மகிமை:

விருதுநகர் மாவட்டம் விருதுநகர் பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ள அருப்புக்கோட்டை நகரில் இருக்கும் P. புளியம்பட்டி பகுதியில் செல்வம் செழிக்க அருளும் அருப்புக்கோட்டை P. புளியம்பட்டி வடிவேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் அருப்புக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து 1 கிமீ தொலைவு அல்லது சாத்தூர் நகரிலிருந்து 42 கிமீ தொலைவு அல்லது மதுரை மாநகரிலிருந்து 58 கிமீ தொலைவு அல்லது சிவகாசி நகரிலிருந்து 44 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை P. புளியம்பட்டி வடிவேல் முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத வடிவேல் முருகன் மூலவராக அருள்புரிகின்றார். இக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் 22.01.2024-ல் சிறப்பாக நடந்தேறியது.


அருப்புக்கோட்டை P. புளியம்பட்டி வடிவேல் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தினசரி சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. 6-ம் நாள் மாலை சூரசம்ஹார நிகழ்வு சிறப்பாக நடைபெறும். பங்குனி உத்திரம் திருவிழா வெகுச் சிறப்பாக நடைபெறுகிறது. மேலும் முருகப்பெருமானின் தைப்பூசம், வைகாசி விசாகம் உள்ளிட்ட அனைத்து திருவிழாக்களும் சிறப்பு வழிபாடுகளுடன் நடைபெறுகின்றன.


தல வரலாறு:

அருப்புக்கோட்டை மெயின் பஜார் பகுதியில் இருக்கும் பிரசித்திப் பெற்ற கோவில் வடிவேல் முருகன் கோவில், இந்நகரில் வாழும் வியாபாரிகள், புரவலர்கள், சான்றோர்கள், பக்தர்கள் உதவியுடன் கட்டப்பட்டது. 2024-ல் கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்று 22.01.2024-ல் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.


தல அமைப்பு:

அழகிய திருக்கோவில் கருவறையில் மூலவர் வடிவேல் முருகன் கையில் வேல் கொண்டு வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், சிவபெருமான், சக்தி, பெரியாண்டவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள், ஞான சித்தர் சத்குரு சச்சிதானந்த சுவாமிகள் காட்டு இருளன், தடிக்காரன் உள்ளிட்ட சித்தர்கள், மகான்கள் வீற்றிருந்து ஆற்றலுடன் அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், சஷ்டி, கார்த்திகை


பிரார்த்தனை:

செல்வம் செழிக்க, வியாபாரம் சிறக்க, வல்வினைகள் தீர, பிணிகள் நீங்க, திருமணம், குழந்தை வரம் வேண்டி, நோய்கள் குணமாக, நல்லன அருள, கல்வி, ஞானம் மேம்பட, தோஷங்கள் விலக


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


வியாபாரம் சிறக்க அருளும் விருதுநகர் அருப்புக்கோட்டை வடிவேல் முருகன் திருவடி பணிந்து போற்றுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1293 செல்வம் செழிக்க அருளும் விருதுநகர் அருப்புக்கோட்டை வடிவேல் முருகன்


படம் 2 - 1293 வியாபாரம் சிறக்க அருளும் விருதுநகர் அருப்புக்கோட்டை வடிவேல் முருகன்

Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்