கோவில் 1292 - விருதுநகர் ஜமீன் கொல்லன் கொண்டான் முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1292
நல்லன அருளும் விருதுநகர் ஜமீன் கொல்லன் கொண்டான் முருகன் கோவில்
21.12.24 சனி
அருள்மிகு முருகன் கோவில்
ஜமீன் கொல்லன் கொண்டான் 626142
ராஜபாளையம் வட்டம்
விருதுநகர் மாவட்டம்
இருப்பிடம்: விருதுநகர் 68 கிமீ, ராஜபாளையம் 11 கிமீ, ஸ்ரீவில்லிபுத்தூர் 23 கிமீ, சங்கரன்கோவில் 28 கிமீ, சிவகாசி 44 கிமீ
மூலவர்: முருகன்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல மகிமை:
விருதுநகர் மாவட்டம் விருதுநகர் பேருந்து நிலையத்திலிருந்து 68 கிமீ தொலைவில் ராஜபாளையம் வட்டத்தில் உள்ள ஜமீன் கொல்லன் கொண்டான் கிராமத்தில் நல்லன அருளும் ஜமீன் கொல்லன் கொண்டான் முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் ராஜபாளையம் நகரிலிருந்து 11 கிமீ தொலைவு அல்லது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலிருந்து 23 கிமீ தொலைவு அல்லது சங்கரன்கோவில் நகரிலிருந்து 28 கிமீ தொலைவு அல்லது சிவகாசி நகரிலிருந்து 44 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டத்தில் உள்ள ஜமீன் கொல்லன் கொண்டான் முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் முருகன் வள்ளி, தெய்வானையுடன் அருளாட்சி புரிகின்றார்.
ஜமீன் கொல்லன் கொண்டான் முருகன் கோவிலில் கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்ட அனைத்து திருவிழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கார்த்திகை திருநாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
கொல்லன் கொண்டான் என்பது சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் என்ற பாண்டிய மன்னரால் வாண்டையார் என்ற தளபதிக்கு கொடுக்கப்பட்ட கிராமங்களாகும். நாயக்கர் காலத்தின் போது மதுரை 72 பாளையங்களாக பிரிந்த போது அதனுள் ஒன்றாக அடங்கியது. ஜமீன் கொல்லன் கொண்டான் இராஜபாளையம் பகுதியில் உள்ளது. இப்பகுதியில் வாழ்ந்த ஆன்றோர்கள் மற்றும் பக்தர்கள் பேருதவியுடன் முருகன் கோவில் கட்டப்பட்டது.
தல அமைப்பு:
இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் முருகன் கைகளில் வேல் மற்றும் சேவற்கொடி ஏந்தி வள்ளி, தெய்வானை சமேதராக நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி அளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். முருகப்பெருமானுக்கு முன் ஒரு அழகிய வேல் உள்ளது. கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத முருகன் பொலிவான தோற்றத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். மேலும் கணபதி உள்ளிட்ட பரிவார தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், சஷ்டி, கார்த்திகை
பிரார்த்தனை:
நல்லன அருள, வேண்டும் வரம் கிடைக்க, வினைகள் நீங்க, திருமணத்தடை அகல, சந்தான பாக்கியம் உண்டாக, குடும்ப ஒற்றுமை ஓங்க, நோய்கள் அகல, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
வேண்டும் வரமருளும் விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜமீன் கொல்லன் கொண்டான் முருகனை மனக்கண்ணால் தரிசித்து வழிபடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1192 நல்லன அருளும் விருதுநகர் ஜமீன் கொல்லன் கொண்டான் முருகன்
Comments
Post a Comment