கோவில் 1291 - விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1291

விருப்பங்களை நிறைவேற்றும் விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோவில்

20.12.24 வெள்ளி


அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்

முதலியார்பட்டி

ஸ்ரீவில்லிபுத்தூர் 626125

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்

விருதுநகர் மாவட்டம்

இருப்பிடம்: விருதுநகர் 46 கிமீ, ஸ்ரீவில்லிபுத்தூர் 1 கிமீ, கிருஷ்ணன் கோவில் 10 கிமீ, ராஜபாளையம் 13 கிமீ, சிவகாசி 22 கிமீ, சங்கரன்கோவில் 45 கிமீ


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை


தல மகிமை:

விருதுநகர் மாவட்டம் விருதுநகர் பேருந்து நிலையத்திலிருந்து 46 கிமீ தொலைவில் இருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் உள்ள முதலியார்பட்டியில் விருப்பங்கள் யாவும் நிறைவேற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. மேலும் அருகிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலிருந்து 1 கிமீ தொலைவு அல்லது கிருஷ்ணன் கோவில் நகரிலிருந்து 10 கிமீ தொலைவு அல்லது ராஜபாளையம் நகரிலிருந்து 13 கிமீ தொலைவு அல்லது சிவகாசி நகரம் பேருந்து நிலையத்திலிருந்து 22 கிமீ தொலைவு அல்லது சங்கரன்கோவில் நகரிலிருந்து 45 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக அருள்கின்றார்.


ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மிக அருகில் உலக புகழ் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். இக்கோவில் கந்த சஷ்டி திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்ட முருகப்பெருமானி அனைத்து திருவிழாக்களும் விமரிசையாக நடைபெறுகின்றன.


தல வரலாறு:

ஸ்ரீவில்லிபுத்தூர் வாழ் பெரியோர்களால் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோவில் கட்டப்பட்டது.


தல அமைப்பு:

மிகவும் சிறிய கோவில் கருவறையில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சகிதம் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார், கருவறைக்கெதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இக்கோவிலில் கணபதி வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்,


திருவிழா:

கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், சஷ்டி, கார்த்திகை


பிரார்த்தனை:

விருப்பங்கள் நிறைவேற, செல்வம் பெருக, திருமணம் நடைபெற, குழந்தைப்பேறு வேண்டி, பிணிகள் அகல, எண்ணியது ஈடேற


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 6-9 மாலை 5.30-8


செல்வம் பெருக அருளும் விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி சுப்பிரமணிய சுவாமி திருவடிகள் பணிந்து வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1291 விருப்பங்களை நிறைவேற்றும் விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி சுப்பிரமணிய சுவாமி


படம் 2 - 1291 செல்வம் பெருக அருளும் விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோவில் திரு உலா வாகனம்


Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்