கோவில் 1290 - விருதுநகர் கூமாப்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1290
நினைத்ததை நிறைவேற்றும் விருதுநகர் கூமாப்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோவில்
19.12.24 வியாழன்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் [TM036350]
கூமாப்பட்டி 626133
வத்திராயிருப்பு வட்டம்
விருதுநகர் மாவட்டம்
இருப்பிடம்: விருதுநகர் 49 கிமீ, வத்திராயிருப்பு 8 கிமீ, ஸ்ரீவில்லிபுத்தூர் 24 கிமீ, சிவகாசி 40 கிமீ, ராஜபாளையம் 36 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல மகிமை:
விருதுநகர் மாவட்டம் விருதுநகர் பேருந்து நிலையத்திலிருந்து 49 கிமீ தொலைவில் வத்திராயிருப்பு வட்டத்தில் இருக்கும் கூமாப்பட்டி கிராமத்தில் நினைத்ததை நிறைவேற்றும் கூமாப்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. மேலும் வத்திராயிருப்பு நகரிலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலிருந்து 24 கிமீ தொலைவு அல்லது சிவகாசி நகரிலிருந்து 40 கிமீ தொலைவு அல்லது ராஜபாளையம் நகரிலிருந்து 36 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாப்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் அருளாட்சி புரிகின்றார்.
கூமாப்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் திருவிழாக்கள் சிறப்பு பூஜைகளுடன் விமரிசையாகக் கொண்டாடபடுகின்றன. சஷ்டி, கார்த்திகை தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கூமாப்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் பழமையான கோவிலாகும். தற்போது இக்கோவிலின் நிர்வாகத்தை இந்து அறநிலையத் துறையினர் நிர்வகித்து வருகிறது.
தல அமைப்பு:
மிகவும் பழமையான அமைப்புடன் கூடிய இக்கோவில் கருவறையில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், சிவபெருமான், அம்பாள், பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் இக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், சஷ்டி, கார்த்திகை
பிரார்த்தனை:
நினைத்தது நிறைவேற, திருமண வரம் வேண்டி, குழந்தை பாக்கியம் பெற, குடும்ப வாழ்வு சிறக்க, வினைகள் அகல, பிணிகள் போக்க, நோய்கள் நீங்க, தொழில் மேம்பட, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திருமண வரமருளும் விருதுநகர் கூமாப்பட்டி சுப்பிரமணிய சுவாமியை மனமுருகி வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1290 நினைத்ததை நிறைவேற்றும் விருதுநகர் கூமாப்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோவில்
Comments
Post a Comment