கோவில் 1303 - சேலம் நெத்திமேடு கரியமலை கரடு ஞான தண்டாயுதபாணி சுவாமி கோவில்
🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1303 ஞானங்களை அள்ளித் தரும் சேலம் நெத்திமேடு கரியமலை கரடு ஞான தண்டாயுதபாணி சுவாமி கோவில் 01.01.2025 புதன் அருள்மிகு ஞான தண்டாயுதபாணி சுவாமி திருக் கோவில் [TM005068] கரியமலை கரடு நெத்திமேடு சேலம் 636002 சேலம் மாவட்டம் இருப்பிடம்: சேலம் புதிய பேருந்து நிலையம் 6 கிமீ, சேலம் நகர (பழைய) பேருந்து நிலையம் 5 கிமீ, சேலம் ரயில் சந்திப்பு 8 கிமீ மூலவர்: ஞான தண்டாயுதபாணி சுவாமி தோற்றம்: சுமார் 450 வருடங்கள் தல மகிமை: சேலம் மாவட்டம் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 6 கிமீ தொலைவில் இருக்கும் நெத்திமேடு பகுதியில் கரியமலை கரடு குன்றில் ஞானங்களை அள்ளித் தரும் சேலம் நெத்திமேடு கரியமலை கரடு ஞான தண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. மேலும் சேலம் நகர (பழைய) பேருந்து நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவு அல்லது சேலம் ரயில் சந்திப்பிலிருந்து 8 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சேலம் நெத்திமேடு கரியமலை கரடு ஞான தண்டாயுதபாணி சுவாமி கோவிலை அ...