கோவில் 1298 - விருதுநகர் ராஜபாளையம் சேவல்பட்டி பாலமுருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1298
செல்வம் பெருக அருளும் விருதுநகர் ராஜபாளையம் சேவல்பட்டி பாலமுருகன் கோவில்
27.12.24 வெள்ளி
அருள்மிகு பாலமுருகன் கோவில்
[அ/மி ராஜகணபதி கோவில்]
சேவல்பட்டி
ராஜபாளையம் 626117
ராஜபாளையம் வட்டம்
விருதுநகர் மாவட்டம்
இருப்பிடம்: விருதுநகர் 57 கிமீ, ராஜபாளையம் 3 கிமீ, ஸ்ரீவில்லிபுத்தூர் 12 கிமீ, சிவகாசி 33 கிமீ, சங்கரன்கோவில் 34 கிமீ, சாத்தூர் 47 கிமீ
மூலவர்: பாலமுருகன்
தல மகிமை:
விருதுநகர் மாவட்டம் விருதுநகர் மாநகர பேருந்து நிலையத்திலிருந்து 57 கிமீ தொலைவில் இருக்கும் ராஜபாளையம் சேவல்பட்டி கிராமத்தில் செல்வம் பெருக அருளும் ராஜபாளையம் சேவல்பட்டி பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் ராஜபாளையம் நகரிலிருந்து 3 கிமீ தொலைவு அல்லது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலிருந்து 13 கிமீ தொலைவு அல்லது சிவகாசி நகரிலிருந்து 33 கிமீ தொலைவு அல்லது சங்கரன்கோவில் நகரிலிருந்து 34 கிமீ தொலைவு அல்லது சாத்தூர் நகரிலிருந்து 47 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சேவல்பட்டி பாலமுருகன் கோவிலை அடையலாம். இக்கோவிலில் பாலமுருகன் மூலவராக பொலிவான தோற்றத்தில் அருளாட்சி புரிகின்றார்.
ராஜபாளையம் சேவல்பட்டி பாலமுருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரம் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட கந்தனின் திருவிழாக்கள் அனைத்தும் சிறப்பு பூஜைகளுடன் நடைபெறுகின்றன. சஷ்டி, கார்த்திகை நன்னாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
ராஜபாளையம் சுற்று வட்டார புரவலர்கள், முருக பக்தர்கள் ஆகியோரின் பேருதவியுடன் சேவல்பட்டியில் ராஜகணபதி & பாலமுருகன் கோவில் கட்டப்ப்பட்டது.
தல அமைப்பு:
இக்கோவில் கருவறையில் மூலவர் பாலமுருகன் அழகு நிறைந்த பாலகனாக கையில் வேலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். வேல் வழிபாடும் சிறப்பாக நடக்கின்றது. அருகில் ராஜகணபதி தனிக்கோவிலில் கம்பீரமாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சிவபெருமான், சக்தி, ஆஞ்சநேயர் உள்ளிட்ட தெய்வங்கள் இக்கோவிலில் தனி சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கார்த்திகை
பிரார்த்தனை:
செல்வம் பெருக, விருப்பங்கள் நிறைவேற, மன மகிழ்ச்சி கிட்ட, நினைத்த காரியங்கள் வெற்றி அடைய, பாவங்கள் அகல, தீமைகள் அழிய. குழந்தை பாக்கியம் வேண்டி, நோய்கள் குணமடைய, தொழிலில் மேம்பட
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
விருப்பங்கள் யாவையும் நிறைவேற்றும் விருதுநகர் ராஜபாளையம் சேவல்பட்டி பாலமுருகன் திருப்பாதங்கள் பணிந்து வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1298 செல்வம் பெருக அருளும் விருதுநகர் ராஜபாளையம் சேவல்பட்டி பாலமுருகன்
படம் 2 - 1298 விருப்பங்கள் யாவையும் நிறைவேற்றும் விருதுநகர் ராஜபாளையம் சேவல்பட்டி பாலமுருகன்
Comments
Post a Comment