கோவில் 1303 - சேலம் நெத்திமேடு கரியமலை கரடு ஞான தண்டாயுதபாணி சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1303

ஞானங்களை அள்ளித் தரும் சேலம் நெத்திமேடு கரியமலை கரடு ஞான தண்டாயுதபாணி சுவாமி கோவில்

01.01.2025 புதன்


அருள்மிகு ஞான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் [TM005068]

கரியமலை கரடு

நெத்திமேடு

சேலம் 636002

சேலம் மாவட்டம்

இருப்பிடம்: சேலம் புதிய பேருந்து நிலையம் 6 கிமீ, சேலம் நகர (பழைய) பேருந்து நிலையம் 5 கிமீ, சேலம் ரயில் சந்திப்பு 8 கிமீ


மூலவர்: ஞான தண்டாயுதபாணி சுவாமி

தோற்றம்: சுமார் 450 வருடங்கள்


தல மகிமை:

சேலம் மாவட்டம் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 6 கிமீ தொலைவில் இருக்கும் நெத்திமேடு பகுதியில் கரியமலை கரடு குன்றில் ஞானங்களை அள்ளித் தரும் சேலம் நெத்திமேடு கரியமலை கரடு ஞான தண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. மேலும் சேலம் நகர (பழைய) பேருந்து நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவு அல்லது சேலம் ரயில் சந்திப்பிலிருந்து 8 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சேலம் நெத்திமேடு கரியமலை கரடு ஞான தண்டாயுதபாணி சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் ஞான தண்டாயுதபாணி சுவாமி மூலவராக வீற்றிருந்து அருளாட்சி செய்கின்றார். இக்கோவிலுக்கு அருகில் பிரசித்தி பெற்ற கரியபெருமாள் கோவில், கரியநாதர் (சிவபெருமான்) கோவில், விநாயகர் கோவில், ஐயப்பன் கோவில்கள் இருப்பது கூடுதல் சிறப்பம்சம்.


சேலம் நெத்திமேடு கரியமலை கரடு ஞான தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் கரிநாள் உற்சவம் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. ஏராளாமான பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்து கொள்கின்றனர். கணபதி ஹோமத்துடன் தொடங்கும் இவ்விழாவில் மூலவர் ஞான தண்டாயுதபாணி சுவாமி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து அன்னதானம் நடைபெறும். மேலும் சஷ்டி, கார்த்திகை தின்ங்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.


தல வரலாறு:

சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்னர் உருவானதாகக் கூறப்படும் நெத்திமேடு கரியமலை கரடு ஞான தண்டாயுதபாணி சுவாமி கோவில் தற்போது இந்து அறநிலையத் துறையினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.


தல அமைப்பு:

பழனி மலை போன்ற அமைப்புடன் கூடிய இக்கோவிலுக்கு செல்வதற்கு படிக்கட்டுகள் உள்ளன. அழகிய மயில் கோவில் முன் உள்ளது. கருவறையில் மூலவர் ஞானமே வடிவாக ஞான தண்டாயுதபாணி சுவாமி என்ற திருப்பெயருடன் பழனி தண்டாயுதபாணியை போலவே வீற்றிருந்து ஆற்றலுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் உற்சவ பெருமான், கல்யாண விநாயகர், உச்சிப் பிள்ளையார், ஐயப்பன், கரியநாதன் (சிவபெருமான்), கரியபெருமாள். அலமேலு மங்கை, ஆஞ்சநேயர் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் இம்மலையில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.


திருவிழா:

பொங்கல் கரிநாள், பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, சஷ்டி, கார்த்திகை


பிரார்த்தனை:

ஞானம் மேம்பட, வாழ்வு சிறக்க, மன அமைதி பெற, நல்லன நடக்க, கல்வி, தொழில், வியாபாரம் விருத்தியடைய, பிணிகள் அகல, வினைகள் நீங்க, நோய்கள் குணமாக


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 6 முதல் மாலை 5 வரை


வாழ்வு சிறக்க அருளும் சேலம் நெத்திமேடு கரியமலை கரடு ஞான தண்டாயுதபாணி சுவாமியை போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1- 1303 ஞானங்களை அள்ளித் தரும் சேலம் நெத்திமேடு கரியமலை கரடு ஞான தண்டாயுதபாணி சுவாமி


படம் 2 - 1303 வாழ்வு சிறக்க அருளும் சேலம் நெத்திமேடு கரியமலை கரடு ஞான தண்டாயுதபாணி சுவாமி கோவில் மயில்


Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்