கோவில் 1300 - சேலம் தெசவிளக்கு அணைமேடு ராஜமுருகன் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1300

கோரிக்கைகளை நிறைவேற்றும் சேலம் தெசவிளக்கு அணைமேடு ராஜமுருகன் கோவில்

29.12.24 ஞாயிறு


அருள்மிகு அணைமேடு ராஜமுருகன் திருக்கோவில்

அணைமேடு

தெசவிளக்கு 636013

ஓமலூர் வட்டம்

சேலம் மாவட்டம்

இருப்பிடம்: சேலம் பு. பே. நி/ப. பே.நி/ரயில் சந்திப்பு 20/23/17 கிமீ, தாரமங்கலம் 4 கிமீ, ஓமலூர் 13 கிமீ, மேட்டூர் 31 கிமீ, சங்ககிரி 32 கிமீ


மூலவர்: ராஜமுருகன்

தோற்றம்: 1988 [36 வருடங்கள்]

ஸ்தாபகர்: மகான் வெங்கடாசலம்


தல மகிமை:

சேலம் மாவட்டம் சேலம் புதிய பேருந்து நிலையம்/நகர பேருந்து நிலையம் (பழைய)/சேலம் ரயில் சந்திப்பிலிருந்து 20/23/17 கிமீ தொலைவில் இருக்கும் தெசவிளக்கு கிராமத்தில் (ஓமலூர் வட்டம்) உள்ள அணைமேடு குன்றில் கோரிக்கைகளை நிறைவேற்றும் தெசவிளக்கு அணைமேடு ராஜமுருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் தாரமங்கலம் நகரிலிருந்து 4 கிமீ தொலைவு அல்லது ஓமலூர் நகரிலிருந்து 13 கிமீ தொலைவு அல்லது மேட்டூர் நகரிலிருந்து 31 கிமீ தொலைவு அல்லது சங்ககிரி நகரிலிருந்து 32 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சேலம் மாவட்டம் தெசவிளக்கு அணைமேடு ராஜமுருகன் கோவிலை அடையலாம். ராஜமுருகன் இத்திருக்கோவிலில் மூலவராக வீற்றிருந்து அருளாட்சி புரிகின்றார். புதியதாக 56 அடி உயர முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த முருகன் சிலையின் முகத்தை திருத்தம் செய்ய கோவில் நிர்வாகம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இத்திருக்கோவில் புனரமைக்கப்பட்டு, 20 அடி பீடத்தில் 56 அடி முருகன் சிலை நிறுவப்பட்டு 19.05.2024 அன்று கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.


36 வருடங்கள் பழமையான தெசவிளக்கு அணைமேடு ராஜமுருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரம் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் காவடி ஏந்தி வந்து தங்களது நேர்த்திக்கடனை ராஜமுருகனுக்கு செலுத்துகின்றனர். மேலும் தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பு தீபாராதனைகளுடன் நடைபெறுகின்றன.


தல வரலாறு:

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் சேலம் கஞ்சமலை பாலமுருகன் கோவிலில் வெங்கடாசலம் என்ற சிறந்த முருகன் பக்தர் முருகப்பெருமானுக்கு சேவை செய்து வந்தார். ஒரு நாள் அவரது கனவில் முருகப்பெருமான் தோன்றி, தாரமங்கலம் அருகே தெசவிளக்கு கிராமத்தில் இருக்கும் அணைமேடு பகுதியில் உள்ள குன்றில் தனக்கு ஒரு கோவில் எழுப்புமாறு கூறினாராம். அதன் படியே மகான் வெங்கடாசலம் தெசவிளக்கு கிராமம் வந்து அணைமேட்டு குன்றில் ராஜமுருகன் சிலையை பிரதிஷ்டை செய்து, அணைமேடு ராஜமுருகன் கோவில் கட்டி முடித்தார். சமீபத்தில் 56 அடி உயர முருகன் சிலையை நிறுவிநார். (தற்போது ஸ்தபதி முருகன் சிலையை சீரமைக்க உள்ளார்), இக்கோவில் கும்பாபிஷேகம்19.05.2024-ல் வெகுச் சிறப்பாக நடந்தேறியது.


தல அமைப்பு:

ஆறு கார்த்திகை பெண்களுடன் அழகிய சிற்பங்கள் கொண்ட இக்கோவில் வாயிலில் கொடிமரம் உள்ளது. கருவறையில் மூலவர் ராஜமுருகன் ராஜ கோலத்தில் வலது கையை அபய முத்திரையுடனும், இடது கையை இடுப்பில் ஒயிலாக வைத்தும் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். ஆண்டி அலங்காரத்திலும் அருள்பாலிப்பது சிறப்பம்சம். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. கோவிலில் ஆறு கார்த்திகை பெண்கள் தாமரையில் அமர்ந்த கோலம், ஆறுபடை வீடு முருகப்பெருமான் படங்கள், சிற்பங்கள் பொலிவாக நிறைந்துள்ளன. மேலும் விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கார்த்திகை


பிரார்த்தனை:

கோரிக்கைகள் நிறைவேற, பேச்சு குறைபாடு தீர, வேண்டியது கிடைக்க, வினைகள் நீங்க, பிணிகள் அகல, குழந்தைப்பேறு வேண்டி, திருமணம் நடைபெற, வாழ்வில் வெற்றியடைய, தொழில் சிறக்க, மன அமைதி பெற, நல்லன நடக்க, தோஷங்கள் விலக


நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


பேச்சு குறைபாட்டை தீர்த்தருளி பேச வைக்கும் சேலம் தெசவிளக்கு அணைமேடு ராஜமுருகனை போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1300 கோரிக்கைகளை நிறைவேற்றும் சேலம் தெசவிளக்கு அணைமேடு ராஜமுருகன்


படம் 2 - 1300 பேச்சு குறைபாட்டை தீர்த்தருளி பேச வைக்கும் சேலம் தெசவிளக்கு அணைமேடு ராஜமுருகன்



Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்