கோவில் 1297 - விருதுநகர் மல்லாங்கிணறு பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1297

மன நிம்மதி தந்தருளும் விருதுநகர் மல்லாங்கிணறு பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

26.12.24 வியாழன்


அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

மல்லாங்கிணறு 626109

காரியாப்பட்டி வட்டம்

விருதுநகர் மாவட்டம்

இருப்பிடம்: விருதுநகர் 13 கிமீ, காரியாப்பட்டி 12 கிமீ, அருப்புக்கோட்டை 19 கிமீ, சாத்தூர் 39 கிமீ, சிவகாசி 39 கிமீ, மதுரை 49 கிமீ, திருமங்கலம் 39 கிமீ


மூலவர்: பாலசுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை


தல மகிமை:

விருதுநகர் மாநகர பேருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவில் இருக்கும் காரியாப்பட்டி வட்டம் மல்லாங்கிணறு கிராமத்தில் மன நிம்மதி தந்தருளும் மல்லாங்கிணறு பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. மேலும் காரியாப்பட்டி நகரிலிருந்து 12 கிமீ தொலைவு அல்லது அருப்புக்கோட்டை நகரிலிருந்து 19 கிமீ தொலைவு அல்லது சாத்தூர் நகரிலிருந்து 39 கிமீ தொலைவு அல்லது சிவகாசி நகரிலிருந்து 39 கிமீ தொலைவு அல்லது மதுரை மாநகரிலிருந்து 49 கிமீ தொலைவு அல்லது திருமங்கலம் நகரிலிருந்து 39 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இக்கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத பாலசுப்பிரமணிய சுவாமி மூலவராக அருளாட்சி செய்கின்றார்.


மல்லாங்கிணறு பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசம் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பூஜைகளுடன் நடைபெறுகின்றது. மேலும் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்ட திருவிழாக்களும் மற்றைய முருகப்பெருமான் கோவில்களை போன்றே விமரிசையாக நடக்கின்றன.


தல வரலாறு:

மல்லாங்கிணறு வாழ் முருக பக்தர்களால் இக்கோவில் கட்டப்பட்டு, அறங்காவல் குழ்வினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.


தல அமைப்பு:

அழகிய கோபுரத்தை கொண்ட இக்கோவிலின் கருவறையில் மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் வள்ளி. தெய்வானை சமேதராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறை மூலவருக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இக்கோவிலில் விநாயகர், சிவபெருமான், சக்தி, நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.

.

திருவிழா:

தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கார்த்திகை


பிரார்த்தனை:

மன நிம்மதி கிடைக்க, சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட, வினைகள் தீர, பிணிகள் போக்க, திருமணத்தடை நீங்க, குழந்தைப்பேறு வேண்டி, உடல் ஆரோக்கியம் பேண, எதிரிகள் தொல்லை அகல


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட அருளும் விருதுநகர் மல்லாங்கிணறு பாலசுப்பிரமணிய சுவாமியை மனமுருகி பிரார்த்திப்போம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1297 மன நிம்மதி தந்தருளும் விருதுநகர் மல்லாங்கிணறு பாலசுப்பிரமணிய சுவாமி


படம் 2 - 1297 சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட அருளும் விருதுநகர் மல்லாங்கிணறு பாலசுப்பிரமணிய சுவாமி









Comments