கோவில் 1266 - மதுரை ரயில் நிலையம் சந்திப்பு தங்க பாலமுருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1266
இனிய பிராயணங்களை அமைத்து தரும் மதுரை ரயில் நிலையம் சந்திப்பு தங்க பாலமுருகன் கோவில்
25.11.24 திங்கள்
அருள்மிகு தங்க பாலமுருகன் கோவில்
ரயில் நிலையம் சந்திப்பு
மதுரை 625001
மதுரை மாவட்டம்
இருப்பிடம்: மதுரை பெரியார் பேருந்து நிலையம் 250 மீ, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் 8 கிமீ, மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் 3 கிமீ, மேலூர் 32 கிமீ
மூலவர்: தங்க பாலமுருகன்
தல மகிமை:
மதுரை மாவட்டம் மதுரை மாநகரம் பெரியார் (நகர) பேருந்து நிலையத்திலிருந்து 250 மீ அருகில் இருக்கும் மதுரை ரயில் நிலையம் சந்திப்பு பகுதியில் இனிய பிராயணங்களை அமைத்து தரும் மதுரை ரயில் நிலையம் சந்திப்பு தங்க பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவு அல்லது மேலூர் பேருந்து நிலையத்திலிருந்து 32 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் மதுரை ரயில் நிலையம் சந்திப்பு தங்க பாலமுருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் தங்க பாலமுருகன் அருளாட்சி புரிகின்றார்.
மதுரை ரயில் நிலையம் சந்திப்பு தங்க பாலமுருகன் கோவிலில் முருகபெருமானுக்குரிய தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம் திருவிழாக்கள் அனைத்தும் விமரிசையாக விசேஷ பூஜைகளுடன் கொண்டாடபடுகின்றன. சஷ்டி, கார்த்திகை நன்னாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
மதுரை ரயில் நிலையம் சந்திப்பு பகுதியில் மதுரை ரயில் நிலையம் சந்திப்பு லைசென்ஸ் கூலி போர்ட்டர்கள் யூனியன் இணைப்பு (SRMU) உறுப்பினர்கள் இணைந்து இவ்வூர் வாழ் மக்கள் மற்றும் பிரயாணிகள் பேருதவியுடன் தங்க பாலமுருகன் கோவில் கட்டப்பட்டது.
தல அமைப்பு:
இந்த சிறிய கோவில் கருவறையில் தங்க பாலமுருகன் மூலவராக குழந்தை வடிவில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். இக்கோவிலில் விநாயகப்பெருமானும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், சஷ்டி, கார்த்திகை
பிரார்த்தனை:
இனிய பிராயணங்களை அமைத்து தர, நினைத்த காரியங்கள் நிறைவேற, இன்னல்கள் தீர, மன மகிழ்ச்சி வேண்டி, கல்வி, ஞானம் மேம்பட, தேர்வுகளில் தேர்ச்சியடைய, நல்லன நடக்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
நினைத்த காரியங்கள் நிறைவேற அருளும் மதுரை ரயில் நிலையம் சந்திப்பு தங்க பாலமுருனை மனமுருகி வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
Comments
Post a Comment