கோவில் 1265 - மதுரை மேலூர் பாலமுருகன் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1265

வெற்றிகளை அள்ளித் தரும் மதுரை மேலூர் பாலமுருகன் கோவில்

24.11.24 ஞாயிறு


அருள்மிகு பாலமுருகன் கோவில்

காந்தி பார்க் அருகில்

மேலூர் 625106

மதுரை மாவட்டம்

இருப்பிடம்: மதுரை பெரியார் பேருந்து நிலையம் 34 கிமீ, மேலூர் 1 கிமீ, திருவாதவூர் 10 கிமீ, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் 26 கிமீ, மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் 32 கிமீ

மூலவர்: பாலமுருகன்


தல மகிமை:

மதுரை மாவட்டம் மதுரை மாநகரம் பெரியார் (நகர) பேருந்து நிலையத்திலிருந்து 34 கிமீ தொலைவில் இருக்கும் மேலூர் நகரம் காந்தி பார்க் அருகில் வெற்றிகளை அள்ளித் தரும் மேலூர் பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் மேலூர் பேருந்து நிலையத்திலிருந்து 1 கிமீ தொலைவு அல்லது மாணிக்கவாசகப் பெருமான் அவதரித்த தலமான திருவாதவூர் திருமறைநாதர் கோவிலிலிருந்து 10 கிமீ தொலைவு அல்லது மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து 26 கிமீ தொலைவு அல்லது மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 32 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் மதுரை மாவட்டம் மேலூர் பாலமுருகன் கோவிலை அடையலாம். இக்கோவிலில் பாலமுருகன் பாலகனாக அருள் புரிகின்றார்.


மதுரை மேலூர் பாலமுருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம் திருவிழாக்கள் சிறப்பாக பூஜைகளுடன் கொண்டாடப்படுகிறது. சஷ்டி, கார்த்திகை திருநாட்களில் சிறப்பு தீபாரதனைகள் நடைபெறும்.


தல வரலாறு:

இவ்வூர் புரவலர்கள் மற்றும் பக்தர்கள் முயற்சியுடன் மேலூர் பாலமுருகன் கோவில் கட்டப்பட்டது. 2018-ல் கோவில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.


தல அமைப்பு:

அழகிய இறைவன் சிற்பங்களுடன் கூடிய இக்கோவிலின் கருவறையில் மூலவர் பாலமுருகன் அழகு பாலகனாக கையில் வேலேந்தி திருக்காட்சி அளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, கடம்பன், இடும்பன், சிவபெருமான், அம்பாள், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து பரிவார மூர்த்திகளும் இக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், சஷ்டி, கார்த்திகை


பிரார்த்தனை:

வெற்றிகள் அடைய, எண்ணியது ஈடேற, வினைகள் நீங்க, பிணிகள் அகல, திருமணம் நடைபெற, குழந்தை வரம் வேண்டி, துன்பங்கள் நீங்க, மன அமைதி கிடைக்க, நல்லன நடைபெற


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


எண்ணியது ஈடேற அருளும் மதுரை மேலூர் பாலமுருகன் திருவடிகள் பணிந்து போற்றுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1265 வெற்றிகளை அள்ளித் தரும் மதுரை மேலூர் பாலமுருகன்


படம் 2 - 1265 எண்ணியது ஈடேற அருளும் மதுரை மேலூர் பாலமுருகன் கோவில்



Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்