கோவில் 1239 - இலங்கை திருகோணமலை லிங்கன் நகர் முருகன் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1239

பிணிகள் தீர்க்கும் இலங்கை திருகோணமலை லிங்கன் நகர் முருகன் கோவில்

29.10.2024 செவ்வாய்


அருள்மிகு லிங்கன் நகர் முருகன் கோவில்

[அருள்மிகு லிங்க நகர் முருகன் கோவில்]

H6H6+8JC

திருகோணமலை [Trincomalee]

திருகோணமலை மாவட்டம் [Trincomalee]

கிழக்கு மாகாணம் [Eastern Province]

இலங்கை

இருப்பிடம்: திருகோணமலை பே. நி/ரயில் நிலையம் 4 கிமீ, திருகோணமலை கோணேஸ்வரர் கோவில் 7 கிமீ, திருகோணமலை வில்லூன்றி கந்தசுவாமி கோவில் 5 கிமீ, வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோவில் 57 கிமீ, மட்டக்களப்பு 135 கிமீ, முல்லைத்தீவு 120 கிமீ, அனுராதபுரம் 109 கிமீ

மூலவர்: முருகன்

தேவியர்: வள்ளி, தெய்வானை


தல மகிமை:

இலங்கை கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டம் தலைநகரம் திருகோணமலை மாநகர பேருந்து நிலையம்/ரயில் நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவில் இருக்கும் லிங்கன் நகரில் பிணிகள் தீர்க்கும் லிங்கன் நகர் முருகன் கோவில் அமைந்துள்ளது. மிகவும் சிறப்பு மிக்க திருகோணமலை கோணேஸ்வரர் கோவிலிலிருந்து 7 கிமீ தொலைவு அல்லது புகழ் பெற்ற திருகோணமலை வில்லூன்றி கந்தசுவாமி கோவிலிலிருந்து 5 கிமீ தொலைவு அல்லது வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோவிலிலிருந்து 57 கிமீ தொலைவு அல்லது மட்டக்களப்பு மாநகரிலிருந்து 135 கிமீ தொலைவு அல்லது முல்லைத்தீவிலிருந்து 120 கிமீ தொலைவு அல்லது அனுராதபுரம் மாநகரிலிருந்து 109 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திருகோணமலை லிங்கன் நகர் முருகன் கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவர் முருகன் வள்ளி, தெய்வானை சமேதராக அருளாட்சி செய்கின்றார்.


இக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. ஏராளாமான பக்தர்கள் கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கின்றனர். தினசரி சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறுகின்றன. 6-ம் நாள் மாலை சூரசம்ஹாரம் சிறப்பாக நடைபெறுகின்றது. மறுநாள் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறும். மேலும் முருகப்பெருமானின் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை திருவிழாக்கள் விசேஷ பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன.


தல வரலாறு:

திருகோணமலை வாழ் புரவலர்கள் மற்றும் முருக பக்தர்களின் பேருதவியுடன் லிங்கன் நகர் முருகன் கோவில் கட்டப்பட்டது.

தல அமைப்பு:

இக்கோவிலில் அழகிய கோபுரம் உள்ளது. மயில், பலிப்பீடம் உள்ளன. கருவறையில் மூலவர் முருகன் வள்ளி, தெய்வானை சமேதராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், உற்சவ மூர்த்திகள், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சிவபெருமான், தேவி, பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து பரிவாரத் தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

பிணிகள் நீங்க, நல்லன நடக்க, கேட்டது கிடைக்க, எதிரி தொல்லைகள் அகல, குடும்ப வாழ்வு சிறக்க, நோய்கள் குணாமாக, எதிரி தொல்லைகள் தீர


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


நல்லன நடக்க அருளும் திருகோணமலை லிங்கன் நகர் முருகனை போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


1239 - 1239 பிணிகள் தீர்க்கும் இலங்கை திருகோணமலை லிங்கன் நகர் முருகன்


படம் 2 - 1239 நல்லன நடக்க அருளும் திருகோணமலை லிங்கன் நகர் முருகன்

Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்