கோவில் 1178 - இலங்கை புத்தளம் சேகுவந்தீவு முருகன் கோவில்

 🙏🙏

தினம் ஒரு முருகன் ஆலயம்-1178

இகபர சுகமருளும் இலங்கை புத்தளம் சேகுவந்தீவு முருகன் கோவில்

29.8.2024 வியாழன்


அருள்மிகு சேகுவந்தீவு முருகன் கோவில்

சேகுவந்தீவு [Seguvantheevu]

[மணல்தீவு]

புத்தளம் மாவட்டம் [Puttalam]

வட மேற்கு மாகாணம் [North Western Province]

இலங்கை

இருப்பிடம்: புத்தளம் 2 கிமீ, கல்பிட்டி 48 கிமீ, கொழும்பு 135 கிமீ, அனுராதபுரம் 75 கிமீ, கண்டி 128 கிமீ,


மூலவர்: முருகன்

தேவியர்: வள்ளி, தெய்வானை


தல மகிமை:

இலங்கை வட மேற்கு மாகாணம் புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் நகர் பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ள சேகுவந்தீவு [மணல்தீவு] பகுதியில் இகபர சுகமருளும் சேகுவந்தீவு முருகன் கோவில் அமைந்துள்ளது. கல்பிட்டி துறைமுக நகரிலிருந்து 48 கிமீ தொலைவு அல்லது இலங்கை தலைநகரம் கொழும்பு நகரத்திலிருந்து 135 கிமீ தொலைவு அல்லது அனுராதபுரம் நகரிலிருந்து 75 கிமீ தொலைவு அல்லது கண்டி நகரிலிருந்து 128 கிமீ பிரயாணம் செய்தாலும் புத்தளம் சேகுவந்தீவு முருகன் கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவர் முருகன் வள்ளி, தெய்வானையுடன் அருள்புரிகின்றார்.


இத்திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. மேலும் முருகப்பெருமானின் முக்கிய திருவிழாக்களான பங்குனி உத்திரம், தைப்பூசம், திருக்கார்த்திகை உள்ளிட்ட திருவிழாக்களும் விமரிசையாக நடைபெறுகின்றன கார்த்திகை, சஷ்டி, செவ்வாய், வெள்ளி போன்ற திருநாட்களில் சிறப்பு தீபாராதனைகள் நடக்கின்றன.

தல வரலாறு:

புத்தளம் நகரத்தருகில் அமைந்திருக்கும் சேகுவந்தீவு முருகன் கோவில் உள்ளூர் பக்தர்கள் மற்றும் புரவலர்களால் உருவாக்கப்பட்டது.

தல அமைப்பு:

அழகிய அமைப்புகளுடன் இக்கோவிலில் வேல், மயில், பலிபீடம் உள்ளன. கருவறையில் முருகப்பெருமான் கையில் வேலுடன் வள்ளி, தெய்வானை சமேதராக நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சியருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். இக்கோவிலில் விநாயகர், பைரவர் உட்பட பரிவாரத் தெய்வங்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறனர்.


திருவிழா:

கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், திருக்கார்த்திகை, கார்த்திகை, சஷ்டி, செவ்வாய், வெள்ளி


பிரார்த்தனை:

இகபர சுகமருள, எண்ணியது ஈடேற, நல்லன நடக்க, பிணிகள் நீங்க, மன அமைதி கிடைக்க, திருமணம், குழந்தை வேண்டி, தோஷங்கள் அகல


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


எண்ணியதை எல்லாம் ஈடேற்றும் இலங்கை புத்தளம் சேகுவந்தீவு முருகன் திருவடி பணிந்து வணங்கிடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

கோயம்புத்தூர் 25

🙏🙏


படம் 1 - 1178 இகபர சுகமருளும் இலங்கை புத்தளம் சேகுவந்தீவு முருகன்


படம் 2 - 1178 எண்ணியதை எல்லாம் ஈடேற்றும் இலங்கை புத்தளம் சேகுவந்தீவு முருகன்



Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்