கோவில் 1177 - இலங்கை புத்தளம் தில்லையடி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🙏

தினம் ஒரு முருகன் ஆலயம்-1177

வேண்டியதை தந்தருளும் இலங்கை புத்தளம் தில்லையடி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

28.8.2024 புதன்


அருள்மிகு தில்லையடி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

தில்லையடி [Thillaiyadi]

[தில்லையாடி]

புத்தளம் மாவட்டம் [Puttalam]

வட மேற்கு மாகாணம் [North Western Province]

இலங்கை

இருப்பிடம்: புத்தளம் 5 கிமீ, கொழும்பு 131 கிமீ, அனுராதபுரம் 78 கிமீ, கண்டி 131 கிமீ


மூலவர்: சிவசுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை


தல மகிமை:

இலங்கை வட மேற்கு மாகாணம் புத்தளம் மாவட்டத்தில் புத்தளம்-கொழும்பு வீதியில் புத்தளம் நகரிலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ள தில்லையடி [தில்லையாடி] நகரத்தில் வேண்டியதை தந்தருளும் தில்லையடி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இலங்கை தலைநகரம் கொழும்பு நகரத்திலிருந்து 131 கிமீ தொலைவு அல்லது அனுராதபுரம் நகரிலிருந்து 78 கிமீ தொலைவு அல்லது கண்டி நகரிலிருந்து 131 கிமீ பிரயாணம் செய்தாலும் புத்தளம் தில்லையடி சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சிவசுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக அருளாட்சி புரிகின்றார்.


இக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. மேலும் முருகப்பெருமானின் முக்கிய திருவிழாக்களான பங்குனி உத்திரம், தைப்பூசம், திருக்கார்த்திகை உள்ளிட்ட திருநாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.

தல வரலாறு:

புத்தளம் நகரத்தருகில் அமைந்திருக்கும் தில்லையடி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் புனரமைக்கப்பட்டு வருகிறது.

தல அமைப்பு:

இக்கோவில் கருவறையில் சிவசுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் வள்ளி, தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். விநாயகர், பைரவர், நவக்கிரகங்கள் இக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறனர்.


திருவிழா:

கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், திருக்கார்த்திகை, கார்த்திகை, சஷ்டி


பிரார்த்தனை:

வேண்டியதை தந்தருள, தீவினைகள் அகல, வினைகள் அகல, நோய்கள் குணமாக, திருமணத்தடை அகல, குழந்தை வர வேண்டி


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


தீவினைகள் அகல அருளும் இலங்கை புத்தளம் தில்லையடி சிவசுப்பிரமணிய சுவாமியை மனமுருகி வேண்டுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

கோயம்புத்தூர் 25

🙏🙏


படம் 1 - 1177 வேண்டியதை தந்தருளும் இலங்கை புத்தளம் தில்லையடி சிவசுப்பிரமணிய சுவாமி


படம் 2 - 1177 தீவினைகள் அகல அருளும் இலங்கை புத்தளம் தில்லையடி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்



Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்