கோவில் 1176 - இலங்கை கொடிகாமம் கச்சாய் முருகன் கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-1176
இடர்கள் களையும் இலங்கை கொடிகாமம் கச்சாய் முருகன் கோவில்
27.8.2024 செவ்வாய்
அருள்மிகு கச்சாய் முருகன் கோவில்
கச்சாய் [Kachchai]
கொடிகாமம் [Kodikamam]
யாழ்ப்பாணம் மாவட்டம் [Jaffina]
வடக்கு மாகாணம் [Northern Province]
இலங்கை
இருப்பிடம்: யாழ்ப்பாணம் 25 கிமீ, கொடிகாமம் 5 கிமீ, சாவகச்சேரி 11 கிமீ, திருநெல்வேலி (இலங்கை) 25 கிமீ
மூலவர்: முருகன் (வேல்)
தல மகிமை:
இலங்கை வடக்கு மாகாணம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ்ப்பாணம்-கண்டி வீதியில் யாழ்ப்பாணம் நகரிலிருந்து 25 கிமீ தொலைவில் உள்ள கச்சாய் கிராமத்தில் இடர்கள் களையும் கச்சாய் முருகன் கோவில் (கொடிகாமம் அருகில்) அமைந்துள்ளது. மேலும் கொடிகாமம் நகரிலிருந்து 5 கிமீ தொலைவு அல்லது சாவகச்சேரி பகுதியிலிருந்து 11 கிமீ தொலைவு அல்லது திருநெல்வேலி (இலங்கை) பகுதியிலிருந்து 25 கிமீ பிரயாணம் செய்தாலும் கொடிகாமம் கச்சாய் முருகன் கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவர் வேல் (முருகன்) ஆற்றலுடன் அருள்கின்றது.
இக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. பங்குனி உத்திரம், தைப்பூசம், திருக்கார்த்திகை உள்ளிட்ட திருநாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கொடிகாமம் பகுதியில் தமிழர்கள் வாழும் கச்சாய் பகுதியில் இந்த முருகன் கோவில் பிரதான கோவிலாகக் கருதப்படுகிறது.
தல அமைப்பு:
இக்கோவிலின் உள்ளே கருவறையில் முருகப்பெருமானின் வேல் பிரதான மூர்த்தியாக பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபட வரும் பக்தர்களும் கேட்கும் வரங்களை வாரி வழங்குகிறது. மேலும் விநாயகர், பைரவர் மற்றும் பிற தெய்வங்கள் இக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறனர்.
திருவிழா:
கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், திருக்கார்த்திகை, கார்த்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
இடர்கள் களைய, கேட்கும் வரங்கள் நிறைவேற, கல்வி, ஞானம் சிறக்க, தொழில் மேம்பட, வினைகள் நீங்க, பிணிகள் அகல
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
கேட்கும் வரங்களை அள்ளி வழங்கும் இலங்கை கொடிகாமம் கச்சாய் முருகனை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - 1176 இடர்கள் களையும் இலங்கை கொடிகாமம் கச்சாய் முருகன் கோவில் சக்தி மிக்க வேல்
படம் 2 - 1176 கேட்கும் வரங்களை அள்ளி வழங்கும் இலங்கை கொடிகாமம் கச்சாய் முருகன் கோவில் ஆற்றல் மிக்க வேல்
Comments
Post a Comment