கோவில் 1174 - இலங்கை மட்டக்களப்பு ஜெயந்திபுரம் குமாரத்தன் முருகன் கோவில்
🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-1174
மனமகிழ்ச்சி தரும் இலங்கை மட்டக்களப்பு ஜெயந்திபுரம் குமாரத்தன் முருகன் கோவில்
25.8.2024 ஞாயிறு
அருள்மிகு குமாரத்தன் முருகன் கோவில்
ஜெயந்திபுரம் [Jayanthipuram]
மட்டக்களப்பு [Batticaloa]
மட்டக்களப்பு மாவட்டம் [Batticaloa]
கிழக்கு மாகாணம் [Eastern Province]
இலங்கை
இருப்பிடம்: மட்டக்களப்பு 1.5 கிமீ, ஆரையம்பதி கந்தசுவாமி கோவில் 10 கிமீ, மண்டூர் கந்தசுவாமி கோவில் 40 கிமீ
மூலவர்: குமாரத்தன் முருகன்
உற்சயர்: முருகன் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
இலங்கை கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு நகரிலிருந்து 1.5 கிமீ தொலைவில் உள்ள ஜெயந்திபுரம் பகுதியில் மகிழ்ச்சி தந்தருளும் குமாரத்தன் முருகன் கோவில் அமைந்துள்ளது. ஆரையம்பதி கந்தசுவாமி கோவிலில் இருந்து 10 கிமீ தொலைவு அல்லது மண்டூர் கந்தசுவாமி கோவிலில் இருந்து 40 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் மட்டக்களப்பு ஜெயந்திபுரம் குமாரத்தான் முருகன் கோவிலை அடையலாம். இக்கோவிலில் குமாரத்தன் முருகன் மூலவராக ஆட்சி செய்கிறார். 06.02.2022-ல் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மட்டக்களப்பு ஜெயந்திபுரம் குமாரத்தான் முருகன் கோவில் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கதிர்காமம் பாதயாத்திரை செல்லுகின்றனர்.
இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மஹோற்சவம் 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. கொடியேற்றம், சப்பர திருவிழா, தேரோட்டம், தீர்த்தோற்சவம் ஆகியவை சிறப்பு நிகழ்வுகள் ஆகும். கந்த சஷ்டி திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. தினமும் அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. சூரசம்ஹார நிகழ்வு மிகவும் கோலாகலமாக நடக்கிறது. பங்குனி உத்திரம், தைப்பூசம், திருக்கார்த்திகை உள்ளிட்ட திருநாட்களிலும் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
ஜெயந்திபுரம் குமாரத்தன் முருகன் கோவில் மட்டக்களப்பு பகுதியில் மிகவும் பழமையான, மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். 2022-ல் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 06.02.2022 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது புரவலர்கள் மற்றும் பக்தர்கள் பேருதவியுடன் வசந்த மண்டபம் கட்டப்பட்டு வருகிறது
தல அமைப்பு:
இக்கோவிலின் உள்ளே கொடிமரம், மயில், பலிபீடம் உள்ளன. கருவறையில் மூலவர் குமாரத்தன் முருகன் கையில் தண்டத்துடன் ஞானமே வடிவாக நின்ற நிலையில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். ஆற்றல் மிக்க வேல் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மேலும் விநாயகர், உற்சவர்கள், சண்டிகேஸ்வரர், பைரவர் மற்றும் பரிவார தெய்வங்கள் இக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறனர்.
திருவிழா:
ஆவணி மஹோற்சவம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், திருக்கார்த்திகை, புத்தாண்டு பிறப்பு, கார்த்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
மனமகிழ்ச்சி வேண்டி, வாழ்வில் ஜெயமடைய, தீவினைகள் அகல, பிணிகள் நீங்க, கேட்டது கிடைக்க, வியாபாரம் செழிக்க, ஞானம் மேம்பட
நேர்த்திக்கடன்:
பால்குடம், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
வாழ்வில் ஜெயமடைய அருளும் இலங்கை மட்டக்களப்பு ஜெயந்திபுரம் குமாரத்தான் முருகனை வழிபடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🙏
Comments
Post a Comment