கோவில் 1173 - இலங்கை காரைநகர் கிழவன்காடு கந்தசுவாமி கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-1173
வாழ்வில் திருப்பங்கள் தரும் இலங்கை காரைநகர் கிழவன்காடு கந்தசுவாமி கோவில்
24.8.2024 சனி
அருள்மிகு கிழவன்காடு கந்தசுவாமி கோவில்
புதுரோடு
கிழவன்காடு
காரைநகர் [Karainagar]
யாழ்ப்பாணம் மாவட்டம் [Jaffina]
வடக்கு மாகாணம் [Northern Province]
இலங்கை
இருப்பிடம்: யாழ்ப்பாணம் 21 கிமீ, காரைநகர் 1 கிமீ, வட்டுக்கோட்டை 8 கிமீ, கொக்குவில் 20 கிமீ
மூலவர்: கந்தசுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல மகிமை:
இலங்கை வடக்கு மாகாணம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் நகரிலிருந்து 21 கிமீ தொலைவில் உள்ள காரைநகர் தீவில் காரைநகர் புதுரோட்டில் இருக்கும் கிழவன்காடு பகுதியில் வாழ்வில் திருப்பங்கள் தரும் கிழவன்காடு கந்தசுவாமி கோவில் அமைந்துள்ளது. காரைநகரிலிருந்து 1 கிமீ தொலைவு அல்லது வட்டுக்கோட்டையிலிருந்து 9 கிமீ தொலைவு அல்லது கொக்குவிலில் இருந்து 20 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கிழவன்காடு கந்தசுவாமி கோவிலை அடையலாம். கந்தசுவாமி மூலவராக வள்ளி, தெய்வானையுடன் அருள்புரிகின்றார். இக்கோவில் கும்பாபிஷேகம் 09.06.2024-ல் நடைபெற்றது.
இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மஹோற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. கந்த சஷ்டி திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது. தினமும் அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. 6-ம் நாள் மாலை ந்டைபெறும் சூரன் சம்ஹாரம் மிகவும் பிரசித்தி பெற்றது. மேலும் பங்குனி உத்திரம், தைப்பூசம், திருக்கார்த்திகை, கார்த்திகை, சஷ்டி போன்ற திருநாட்களிலும் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
மிகவும் பழமையான கோவிலாக கருதப்படும் காரைநகர் கிழவன்காடு கந்தசுவாமி கோவில் கோவில் பரிபாலன சபையினரால் நிர்வகிக்கப்படுகிறது. 2015-ல் கோவில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. மீண்டும் 2023-ல் கோவில் திருப்பணிகள் நடைபெற்று 09.06.2024 மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தல அமைப்பு:
இக்கோவில் கருவறையில் மூலவர் கந்தசுவாமி பொலிவுடன் தேவியரோடு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, உற்சவர்கள், பைரவர் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
ஆவணி மஹோற்சவம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், திருக்கார்த்திகை, கார்த்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
வாழ்வில் திருப்பங்கள் பெற, மன நிம்மதி பெற, பிணிகள் அகல, கல்வி சிறக்க, திருமண வரம், குழந்தை வரம் வேண்டி
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
மன நிம்மதி தந்தருளும் இலங்கை காரைநகர் கிழவன்காடு கந்தசுவாமியை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - 1173 வாழ்வில் திருப்பங்கள் தரும் இலங்கை காரைநகர் கிழவன்காடு கந்தசுவாமி
படம் 2 - 1173 மன நிம்மதி தந்தருளும் இலங்கை காரைநகர் கிழவன்காடு கந்தசுவாமி
Comments
Post a Comment