கோவில் 1172 - இலங்கை காரைநகர் பயிரிக்கூடல் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🙏

தினம் ஒரு முருகன் ஆலயம்-1172

கர்ம வினைகள் நீங்க அருளும் இலங்கை காரைநகர் பயிரிக்கூடல் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

23.8.2024 வெள்ளி


அருள்மிகு பயிரிக்கூடல் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

காரைநகர் [Karainagar]

யாழ்ப்பாணம் மாவட்டம் [Jaffina]

வடக்கு மாகாணம் [Northern Province]

இலங்கை

இருப்பிடம்: யாழ்ப்பாணம் 23 கிமீ, காரைநகர் 3 கிமீ, வட்டுக்கோட்டை 11 கிமீ, கொக்குவில் 22 கிமீ


மூலவர்: சிவசுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை


தல மகிமை:

இலங்கை வடக்கு மாகாணம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் நகரிலிருந்து 23 கிமீ தொலைவில் இருக்கும் காரைநகர் தீவில் இருக்கும் பயிரிக்கூடலில் கர்ம வினைகள் நீங்க அருளும் பயிரிக்கூடல் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. காரைநகரிலிருந்து 3 கிமீ தொலைவு அல்லது வட்டுக்கோட்டையிலிருந்து 11 கிமீ தொலைவு அல்லது கொக்குவிலில் இருந்து 22 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் பயிரிக்கூடல் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமி அருளுகின்றார்.


இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மஹோற்சவம் 10 நாட்கள் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் கொடியேற்றம், வேட்டைத் திருவிழா, சப்பர திருவிழா, தேரோட்டத் திருவிழா, தீர்த்தோற்சவம் திருவிழா, திருக்கல்யாணம், பைரவர் பூஜை என திருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. இக்கோவிலில் நடைபெறும் வேட்டைத் திருவிழா இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. கந்த சஷ்டி பெருவிழா இக்கோவிலில் சூரசம்ஹார நிகழ்வுடன் சிறப்பாக நடக்கின்றது. முருகப்பெருமானின் பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை உட்பட எல்லா திருவிழாக்களும் சிறப்பு பூஜைகளுடன் நடைபெறுகின்றன.

தல வரலாறு:

காரைநகர் தீவுகளில் பயிரிக்கூடல் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் ஒரு முக்கியமான முருகன் கோவிலாக கருதப்படுகிறது. 2007-ம் ஆண்டு ராஜகோபுர மகா கும்பாபிஷேகத்தின் போது காரைநகர் தலப்பாடல்கள் வெளியிடப்பட்டது. அளவையூர் அருட்கவி விநாசித்தம்பிப் புலவர் இயற்றிய காரைநகர் பயிரிக்கூடல் சுப்பிரமணிய சுவாமி பிள்ளைத் தமிழ் என்னும் நூல் காரைநகரில் பிரசித்தி பெற்றது. கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 2011-ல் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக ந்டைபெற்றது.

தல அமைப்பு:

இக்கோவிலில் அழகிய கொடிமரம் உள்ளது. கருவறையில் சிவசுப்பிரமணிய சுவாமி மூலவராக வீற்றிருந்து வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், கோஷ்ட தெய்வங்கள், உற்சவ மூர்த்திகள், பைரவர் மற்றும் பல பரிவார மூர்த்திகளும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.

திருவிழா:

தை மஹோற்சவம் (தைப்பூசம்), கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, கார்த்திகை, சஷ்டி


பிரார்த்தனை:

கர்ம வினைகள் நீங்க, சகல நன்மைகள் கிடைக்க, வியாபாரம் சிறக்க, பிணிகள் அகல, திருமணத்தடை நீங்க, சந்தான பாக்கியம் உண்டாக, நல்லன நடக்க


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


சகல நன்மைகளையும் தரும் இலங்கை காரைநகர் பயிரிக்கூடல் சிவசுப்பிரமணிய சுவாமி திருவடிகள் பணிந்து போற்றுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

கோயம்புத்தூர் 25

🙏🙏


படம் 1 - 1172 கர்ம வினைகள் நீங்க அருளும் இலங்கை காரைநகர் பயிரிக்கூடல் சிவசுப்பிரமணிய சுவாமி


படம் 2 - 1172 சகல நன்மைகளையும் தரும் இலங்கை காரைநகர் பயிரிக்கூடல் சிவசுப்பிரமணிய சுவாமி



Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்