கோவில் 1170 - இலங்கை புலோலி வில்லிபாதி முருகன் கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-1170
வாழ்வில் ஏற்றம் தரும் இலங்கை புலோலி வில்லிபாதி முருகன் கோவில்
21.8.2024 புதன்
அருள்மிகு வில்லிபாதி முருகன் கோவில்
புலோலி [Puloly]
யாழ்ப்பாணம் மாவட்டம் [Jaffina]
வடக்கு மாகாணம் [Northern Province]
இலங்கை
இருப்பிடம்: யாழ்ப்பாணம் 39 கிமீ, பருத்தித்துறை 2 கிமீ சாவகச்சேரி 23 கிமீ, நாகர்கோயில் (இலங்கை) 17 கிமீ
மூலவர்: முருகன் (வேல்)
உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
இலங்கை வடக்கு மாகாணம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் நகரிலிருந்து யாழ்ப்பாணம்-பருத்தித்துறை சாலையில் 39 கிமீ தொலைவில் உள்ள புலோலி நகரில் வாழ்வில் ஏற்றம் தரும் வில்லிபாதி முருகன் கோவில் அமைந்துள்ளது. பருத்தித்துறை நகரிலிருந்து 2 மீ தொலைவு அல்லது சாவகச்சேரியிலிருந்து 23 கிமீ தொலைவு அல்லது நாகர்கோயில் (இலங்கை) பகுதியிலிருந்து 17 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் புலோலி வில்லிபாதி முருகன் கோவிலை அடையலாம். இக்கோவிலில் முருகப்பெருமான் (வேல்) ஆற்றலுடன் அருள்புரிகின்றார். இக்கோவில் கும்பாபிஷேகம் 09.06.2023 அன்று நடைபெற்றது.
பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் பண்டிதர்கள், வித்துவ சிரோமணிகள், நாவலர்கள் , புலவர்கள் அறிஞர்கள் போன்றோர் புராதான நகரமான புலோலியில் பிறந்து பணியாற்றித் தத்தம் முத்திரையைப் பதித்து மறைந்தமைக்கான சான்றுகள் உள்ளதாக அறியப்படுகிறது. சிறப்பு வாய்ந்த பல புலவர்களின் குரல் ஒலித்தமையால் புலோலி என்னும் காரணப்பெயர் இதற்கு சூட்டப்பெற்றது. பச்சிமப் புலவர்கான நகரம் என இதற்கு மற்றொரு பெயருமுண்டு.
இக்கோவிலில் முருகப்பெருமானின் கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, உள்ளிட்ட அனைத்து திருவிழாக்களும் சிறப்பு பூஜைகளுடன் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
புலோலி வில்லிபாதி முருகன் கோவிலில் 2022-ல் திருப்பணிகள் மேற்கொண்டு 09.06.203-ல் மகா கும்பாபிஷேம் சிறப்பாக நடைபெற்றது.
தல அமைப்பு:
ஆகம அமைப்புடன் கூடிய இக்கோவிலில் கருவறையில் முருகப்பெருமான் வேல் உருவில் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட வடிவான உற்சவ மூர்த்திகளும் அருள்பாலிக்கின்றனர். மேலும் விநாயகர், சண்டிகேஸ்வரர், ஆஞ்சநேயர், புதியதாக கட்டப்பட்ட மகாலட்சுமி, பைரவர் மற்றும் பரிவார தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, கார்த்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
வாழ்வில் ஏற்றம் பெற, சஞ்சலங்கள் நீங்க, கேட்ட வரங்களை அள்ளி வழங்க, பிணிகள் தீர, நோய்கள் குணமாக, மன மகிழ்ச்சி கிட்ட
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
சஞ்சலங்களை நீக்கும் புலோலி வில்லிபாதி முருகனை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - 1170 வாழ்வில் ஏற்றம் தரும் இலங்கை புலோலி வில்லிபாதி முருகன் (வேல்)
படம் 2 - 1170 சஞ்சலங்களை நீக்கும் இலங்கை புலோலி வில்லிபாதி முருகன்
Comments
Post a Comment