கோவில் 1169 - இலங்கை நவாலி அந்திரான் முருகமூர்த்தி கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-1169
செல்வ வளமருளும் இலங்கை நவாலி அந்திரான் முருகமூர்த்தி கோவில்
20.8.2024 செவ்வாய்
அருள்மிகு அந்திரான் முருகமூர்த்தி கோவில்
அந்திரான் [Andhiran]
நவாலி [Navali]
யாழ்ப்பாணம் மாவட்டம் [Jaffina]
வடக்கு மாகாணம் [Northern Province]
இலங்கை
இருப்பிடம்: யாழ்ப்பாணம் 8 கிமீ, நாவலி 500மீ, கொக்குவில் 5 கிமீ, திருநெல்வேலி (இலங்கை) 7 கிமீ, நல்லூர் கந்தசுவாமி கோவில் 8 கிமீ
மூலவர்: முருகமூர்த்தி
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல மகிமை:
இலங்கை வடக்கு மாகாணம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் நகரிலிருந்து யாழ்ப்பாணம்-காரைநகர் சாலையில் 8 கிமீ தொலைவில் உள்ள நவாலி நகரில் உள்ள அந்திரான் என்னும் கிராமத்தில் செல்வ வளமருளும் அந்திரான் முருகமூர்த்தி கோவில் அமைந்துள்ளது. நாவலி நகரிலிருந்து 500 மீ தொலைவு அல்லது கொக்குவில்லிருந்து 5 கிமீ தொலைவு அல்லது திருநெல்வேலி (இலங்கை) பகுதியிலிருந்து 7 கிமீ அல்லது பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோவிலிலிருந்து 8 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் நவாலி அந்திரான் முருகமூர்த்தி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் முருகமூர்த்தி வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கின்றார். இக்கோவில் கும்பாபிஷேகம் 30.06.2017 அன்று நடைபெற்றது.
இக்கோவிலில் ஆவணி மஹோற்சவம் வெகு விமரிசையாக நடக்கின்றது. [தற்போது 2024 ஆவணி மஹோற்சவம் நடைபெற்று கொண்டிருக்கின்றது]. இத்திருவிழாவில் கொடியேற்றம், தினசரி காலை அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், மாம்பழத் திருவிழா, சப்பற திருவிழா, காவடித் திருவிழா, தேரோட்டம், திருக்கல்யாணம், பைரவர் பூஜை என சிறப்பாக நடைபெறுகின்றது. கந்த சஷ்டி திருவிழா 6 நாட்கள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சூரசம்ஹாரம் சிறப்பு நிகழ்வாகும். மேலும் முருகமூர்த்தியின் திருவிழாக்களான தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, முதலிய திருவிழாக்கள் சிறப்பு பூஜைகளுடன் நடக்கின்றன. இக்கோவிலில் மகா சிவராத்திரி வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
தல வரலாறு:
மிகவும் பழமையான நவாலி அந்திரான் முருகமூர்த்தி இப்பகுதியில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவிலை பராமரித்து வரும் பரிபாலனக் குழு பக்தர்களின் ஒத்துழைப்புடன் கோவிலை புனரமைத்து 25.061997 மற்றும் 30.06.2017-ல் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
தல அமைப்பு:
அழகிய ராஜகோபுரத்துடன் கூடிய இக்கோவிலில் கொடிமரம், மயில், பலிப்பெடம் உள்ளன. கருவறையில் மூலவராக அந்திரான் அழகன் முருகமூர்த்தி நின்ற திருக்கோலத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். மேலும் இக்கோவிலில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சிவபெருமான், பார்வதி தேவி, லட்சுமி சமேத விஷ்ணு, சனீஸ்வரர், நவக்கிரகங்கள் உட்பட அனைத்து தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர். கோவிலருகில் உள்ள மாமரம் அருகில் மாவடி பைரவர் தனிக்கோவில் கொண்டு அருள்பாலிக்கின்றார்.
திருவிழா:
ஆவணி மஹோற்சவம், கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி, கார்த்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
செல்வ வளம் வேண்டி, தீவினகளை அகற்ற, கேட்டது கிடைத்திட, நல்லன நடைபெற, பிணிகள் நீங்க, தோஷங்கள் அகல, வியாபாரம் மேம்பட
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
தீவினகளை அகற்ற அருளும் இலங்கை நவாலி அந்திரான் முருகமூர்த்தியை மனமுருகி தொழுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - 1169 செல்வ வளமருளும் இலங்கை நவாலி அந்திரான் முருகமூர்த்தி கோவில் உற்சவர்
படம் 2 - 1169 தீவினகளை அகற்ற அருளும் இலங்கை நவாலி அந்திரான் முருகமூர்த்தி கோவில்
Comments
Post a Comment