கோவில் 1168 - இலங்கை கைதடி கயிற்றசிட்டி கந்தசுவாமி கோவில்

 🙏

தினம் ஒரு முருகன் ஆலயம்-1168

எடுத்த காரியங்களில் வெற்றியடைய அருளும் இலங்கை கைதடி கயிற்றசிட்டி கந்தசுவாமி கோவில்

19.8.2024 திங்கள்


அருள்மிகு கயிற்றசிட்டி கந்தசுவாமி கோவில்

[கையிற்றசிட்டி]

கைதடி வடக்கு [Kaithady North]

கைதடி [Kaithady]

சாவகச்சேரி [Chavakachcheri]

யாழ்ப்பாணம் மாவட்டம் [Jaffina]

வடக்கு மாகாணம் [Northern Province]

இலங்கை

இருப்பிடம்: யாழ்ப்பாணம் 14 கிமீ, சாவகச்சேரி 7 கிமீ, மீசாலை மேற்கு 13 கிமீ, கொடிகாமம் 18 கிமீ


மூலவர்: கந்தசுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை


தல மகிமை:

இலங்கை வடக்கு மாகாணம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் நகரிலிருந்து யாழ்ப்பாணம்-கண்டி நெடுஞ்சாலையில் 14 கிமீ தொலைவில் உள்ள கைதடி பகுதியில் உள்ள கைதடி வடக்கு பகுதியில் எடுத்த காரியங்களில் வெற்றியடைய அருளும் கயிற்றசிட்டி கந்தசுவாமி கோவில் அமைந்துள்ளது. மேலும் சாவகச்சேரியிலிருந்து 7 கிமீ தொலைவு அல்லது மீசாலை மேற்கு பகுதியிலிருந்து 13 கிமீ அல்லது கொடிகாமம் பகுதியிலிருந்து 18 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கைதடி வடக்கு கயிற்றசிட்டி கந்தசுவாமி கோவிலை அடையலாம். இக்கோவிலில் கயிற்றசிட்டி கந்தசுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக அருளாட்சி புரிந்து வருகின்றார். இக்கோவில் கும்பாபிஷேகம் 20.3.2024-ல் நடைபெற்றது.


இக்கோவிலில் ஆனி மஹோற்சவம் வெகு விமரிசையாக நடக்கின்றது. 13 நாட்கள் சிறப்பாக நடைபெறும் இத்திருவிழாவில் கொடியேற்றம், தினசரி காலை அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வேட்டைத் திருவிழா, சப்பற திருவிழா, தேர்த்திருவிழா, பூங்காவனம், திருக்கல்யாணம், பைரவர் பூஜை என கோலாகலமாக நடைபெறுகின்றது. கந்த சஷ்டி திருவிழா 6 நாட்கள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 6-ம் நாள் மாலை நடைபெறும் சூரசம்ஹாரம் சிறப்பு நிகழ்வாகும். தைப்பூசம் 2 நாட்கள் ஸ்கந்த ஹோம பெருவிழாவாக ந்டைபெறும். மேலும் முருகப்பெருமானின் திருவிழாக்களான பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, பிரதி மாத கார்த்திகை, சஷ்டி சிறப்பு பூஜைகளுடன் நடைபெறுகின்றன.

தல வரலாறு:

கைதடி கயிற்றசிட்டி கந்தசுவாமி கோவில் பழமையான கோவிலாகக் கருதப்படுகின்றது. சமீபத்தில் கந்தசுவாமி திருக்கோவில் புனரமைக்கப்பட்டு 20.03.2024-ல் புனராவர்த்தன சாஷ்ட பந்தன நவகுண்டபக்ஷ மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.


தல அமைப்பு:

அழகிய அமைப்புடன் கூடிய கோவிலில் கொடிமரம், மயில், பலிபீடம் உள்ளன. இக்கோவில் கருவறையில் கந்தசுவாமி கையில் வேலுடன் வள்ளி, தெய்வானை சமேதராக நின்ற கோலத்தில் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். முருகப்பெருமானின் வேல் தனி சந்நிதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆற்றலுடன் அருள்பாலிக்கின்றது. மேலும் விநாயகர், ஈசன், பைரவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களும் கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, கார்த்திகை, சஷ்டி


பிரார்த்தனை:

எடுத்த காரியங்களில் வெற்றியடைய, நோய்கள் குணமாக, துன்பங்கள் நீங்க, திருமணத்தடை அகல, குழந்தை வரம் வேண்டி, குடும்ப வாழ்வு சிறக்க, கேட்டது கிடைக்க


நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


நோய்கள் குணமாக அருளும் இலங்கை கைதடி கயிற்றசிட்டி கந்தசுவாமியை போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

கோயம்புத்தூர் 25

🙏🙏


படம் 1 - 1168 எடுத்த காரியங்களில் வெற்றியடைய அருளும் இலங்கை கைதடி கயிற்றசிட்டி கந்தசுவாமி


படம் 2 - 1168 நோய்கள் குணமாக அருளும் இலங்கை கைதடி கயிற்றசிட்டி கந்தசுவாமி



Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்