கோவில் 1143 - இலங்கை உடுவில் முருகமூர்த்தி கோவில்

 🙏🙏

தினம் ஒரு முருகன் ஆலயம்-1143

கேட்டதை எல்லாம் தந்தருளும் இலங்கை உடுவில் முருகமூர்த்தி கோவில்

25.7.2024 வியாழன்


அருள்மிகு முருகமூர்த்தி கோவில்

உடுவில் (Uduvil)

யாழ்ப்பாணம் மாவட்டம் (Jaffina)

வடக்கு மாகாணம் (Northern Province)

இலங்கை

இருப்பிடம்: யாழ்ப்பாணம் 11 கிமீ, கொக்குவில் 7 கிமீ, திருநெல்வேலி (இலங்கை) 9 கிமீ, நல்லூர் கந்தசாமி கோவில் 11 கிமீ, இணுவில் கந்தசாமி கோவில் 2 கிமீ


மூலவர்: முருகமூர்த்தி

உற்சவர்: முருகமூர்த்தி வள்ளி, தெய்வானை


தல மகிமை:

இலங்கை வடக்கு மாகாணம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் நகரிலிருந்து 11 கிமீ தொலைவில் உள்ள உடுவில் கிராமத்தில் கேட்டதை எல்லாம் தந்தருளும் முருகமூர்த்தி கோவில் அமைந்துள்ளது. கொக்குவில் நகரிலிருந்து 7 கிமீ தொலைவு அல்லது திருநெல்வேலி (இலங்கை) நகரிலிருந்து 9 கிமீ தொலைவு அல்லது மிகவும் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி கோவிலிலிருந்து 11 கிமீ தொலைவு அல்லது சிறப்பு மிக்க இணுவில் கந்தசாமி கோவிலிலிருந்து 2 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் உடுவில் முருகமூர்த்தி கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவராக முருகமூர்த்தி அருள்பாலித்து வருகின்றார்.


இத்திருக்கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. அதிக அளவில் முருக பக்தர்கள் விரதம் அனுஷ்டித்து, முருகமூர்த்தியை வழிபட்டு வேண்டிய பலன்களை பெற்று செல்கின்றனர். சஷ்டி திருநாளில் நடைபெறும் சூரசம்ஹாரம் முக்கிய நிகழ்வாகும். பங்குனி உத்திரம், தைப்பூசம் உள்ளிட்ட அனைத்து முருகப்பெருமானின் திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.


தல வரலாறு:

உடுவில் கிராமத்தில் அமைந்துள்ள இந்து ஆலயங்களில் முருகமூர்த்தி கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகக் கருதப்படுகிறது.

தல அமைப்பு:

அழகிய சிற்பங்கள், ஓவியங்கள் கொண்ட இக்கோவில் கோபுர வாயிலினுள் நுழைந்த உடன் கொடிமரம் உள்ளது. வேல், மயில், பலிபீடம் கருவறைக்கு எதிரில் உள்ளது. மூலஸ்தானத்தில் மூலவர் முருகமூர்த்தி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், பைரவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி கார்த்திகை, சஷ்டி


பிரார்த்தனை:

கேட்டதெல்லாம் கிடக்க, சங்கடங்கள் தீர, நல்லன நடக்க, நோய்கள் குணமாக, குழந்தை வரம் வேண்டி, தோஷங்கள் விலக


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்


சங்கடங்கள் யாவும் தீர்க்கும் இலங்கை உடுவில் முருகமூர்த்தியை மனமுருகி பிரார்த்திப்போம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

கோயம்புத்தூர் 25

🙏🙏


படம் 1 - 1143 கேட்டதை எல்லாம் தந்தருளும் இலங்கை உடுவில் முருகமூர்த்தி


படம் 2 - 1143 சங்கடங்கள் யாவும் தீர்க்கும் இலங்கை உடுவில் முருகமூர்த்தி கோவில்


Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்