கோவில் 1081 - திருவண்ணாமலை கிரிவலப்பாதை செங்கம் ரோடு ஆறுமுக சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1081

சகல ஞானங்களையும் அருளும் திருவண்ணாமலை கிரிவலப்பாதை செங்கம் ரோடு ஆறுமுக சுவாமி கோவில்

24.5.2024 வெள்ளி


அருள்மிகு ஆறுமுக சுவாமி திருக்கோவில்

கிரிவலப்பாதை

செங்கம் ரோடு

திருவண்ணாமலை-606601

திருவண்ணாமலை மாவட்டம்

இருப்பிடம்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் 3 கிமீ


மூலவர்: ஆறுமுக சுவாமி


தல மகிமை:

திருவண்ணாமலை கோவில் நகரத்தின் மையத்தில் உண்ணாமுலை அம்மன் உடனுறை அண்ணாமலையார் அருளும் திருவண்ணாமலை திருத்தலத்தில் உள்ள கிரிவலப் பாதையில் செங்கம் பாதையில் அரசு கலைக்கல்லுரிக்கும், எமலிங்கத்திற்கும் இடையில் சகல ஞானங்களையும் அருளும் திருவண்ணாமலை ஆறுமுக சுவாமி கோவில் அமைந்துள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலிலிருந்து 3 கிமீ தொலைவிலும், திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவிலும் உள்ள இத்திருக்கோவிலில் மூலவராக ஆறுமுக சுவாமி அருளாட்சி செய்கின்றார்.


பௌர்ணமி திருநாளில் திருவண்ணாமலை திருத்தலம் கிரிவலப் பாதையை வலம் வரும் லட்சக் கணக்காண பக்தர்கள், இக்கோவிலுக்கும் வந்து ஆறுமுக சுவாமியை வழிபட்டு, நற்பலன்களை பெற்று செல்கின்றனர். பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, தைக்கிருத்திகை என அனைத்து திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

தல வரலாறு:

உள்ளூர் பக்தர்கள், புரவலர்கள் மற்றும் கிரிவலம் வரும் பக்தர்கள் உதவியுடன் இக்கோவில் கட்டப்பட்டது.


தல அமைப்பு:

பெரிய மதில்களையுடைய இக்கோவில் வாசலில் வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அதிக அளவில் பக்தர்கள் இவ்விடத்தில் ஆறுமுக சுவாமியிடம் வேண்டுகோள் வைத்து விளக்கேற்றுகின்றனர். கோவிலுக்குள் நுழைந்த உடன் வேலும், மயிலும் உள்ளன. கருவறையில் ஆறுமுக சுவாமி கருணையே வடிவாக நின்ற நிலையில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறை வாசலில் கணபதி அருள்பாலிக்கின்றார்.


திருவிழா:

பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, தைக்கிருத்திகை, பௌர்ணமி, கார்த்திகை, சஷ்டி, செவ்வாய், வெள்ளி


பிரார்த்தனை:

ஞானம் வேண்டி, செல்வம் பெருக, கல்வி சிறக்க, வியாபாரம் மேம்பட, தொழில் சிறக்க, விவசாயம் செழிக்க


நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்


செல்வம் பெருக அருளும் திருவண்ணாமலை கிரிவலப்பாதை செங்கம் ரோடு ஆறுமுக சுவாமியை போற்றி தொழுதிடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1081 சகல ஞானங்களையும் அருளும் திருவண்ணாமலை கிரிவலப்பாதை செங்கம் ரோடு ஆறுமுக சுவாமி

படம் 2 - 1081 செல்வம் பெருக அருளும் திருவண்ணாமலை கிரிவலப்பாதை செங்கம் ரோடு ஆறுமுக சுவாமி கோவில்

Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்