கோவில் 1079 - திருவண்ணாமலை புது அப்பேடு பாலமுருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1079
வினைகள் தீர்க்கும் திருவண்ணாமலை புது அப்பேடு பாலமுருகன் கோவில்
22.5.2024 புதன்
அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில்
புது அப்பேடு-632313
சேத்துபட்டு வட்டம்
திருவண்ணாமலை மாவட்டம்
இருப்பிடம்: சேத்துபட்டு 8 கிமீ, திருவண்ணாமலை 55 கிமீ, தேவிகாபுரம் 13 கிமீ
மூலவர்: பாலமுருகன்
தல மகிமை:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துபட்டு வட்டம் சேத்துபட்டு நகரிலிருந்து 8 கிமீ தொலைவில் இருக்கும் புது அப்பேடு கிராமத்தில் உள்ள சின்னமலைக் குன்றில் வினைகள் தீர்க்கும் பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. மாவட்ட தலைநகர் திருவண்ணாமலை கோவில் நகரத்திலிருந்து 55 கிமீ பிரயாணம் செய்தாலும், தேவிகாபுரத்திலிருந்து 13 கிமீ பிரயாணம் செய்தாலும் புது அப்பேடு பாலமுருகன் கோவிலை அடையலாம். மூலவராக பாலமுருகன் இருக்கும் இக்கோவிலின் கும்பாபிஷேகம் 10.09.2021 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் இக்கோவிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
தல வரலாறு:
பாலமுருகன் அறக்கட்டளை குழுவினரால் நிர்வகிக்கப்படும் இக்கோவில் புனரமைக்கப்பட்டு, 10.09.2022-ல் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
தல அமைப்பு:
மலையடிவாரத்தில் அழகிய நெடிய ஆஞ்சநேயர் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கின்றார். அருகில் நவக்கிரகங்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். புதியதாக புனரமைக்கப்பட்ட இக்கோவில் கருவறையில் சிறிய மூர்த்தமாக மூலவர் பாலமுருகன் அழகிய வடிவுடன் நின்ற நிலையில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். விநாயகப்பெருமானும் அருள்பாலிக்கின்றார்.
திருவிழா:
ஆடிக்கிருத்திகை, பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, கார்த்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
வினைகள் தீர, கேட்டது கிடைக்க, சந்தான பாக்கியம் வேண்டி, மன மகிழ்ச்சி பெற, நோய்கள் குணமாக
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்
கேட்டதை தந்தருளும் திருவண்ணாமலை புது அப்பேடு பாலமுருகனை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1- 1079 வினைகள் தீர்க்கும் திருவண்ணாமலை புது அப்பேடு பாலமுருகன்
படம் 2 - 1079 கேட்டதை தந்தருளும் திருவண்ணாமலை புது அப்பேடு பாலமுருகன்
Comments
Post a Comment