கோவில் 1058 - திருவாரூர் நீடாமங்கலம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1058
கேட்டதை தரும் திருவாரூர் நீடாமங்கலம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
1.5.2024 புதன்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
நீடாமங்கலம்-614404
திருவாரூர் மாவட்டம்
இருப்பிடம்: நீடாமங்கலம் 1 கிமீ, மன்னார்குடி 13 கிமீ, திருவாரூர் 31 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல மகிமை:
திருவாரூர் மாவட்டம் தலைநகரம் திருவாரூர் நகரிலிருந்து 31 கிமீ தூரத்திலும், மன்னை நகரம் என்று போற்றப்படும் மன்னார்குடியிலிருந்து 13 கிமீ தூரத்திலும் உள்ள நீடாமங்கலத்தின் (நீடாமங்கலம் பேருந்து நிலையம் 1 கிமீ) கேட்டதை தரும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக அருளாட்சி புரிகின்றார்.
இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனைகள், பால்குடம் ஏந்தி வருதல், தேரோட்டம் என வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஏழு நாட்கள் கந்த சஷ்டி பெருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. முதல் 5 நாட்கள் அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெறுகின்றன. 6-ம் நாள் சத்ரு சம்ஹார யாகமும், 7-ம் நாள் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணமும் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இதர திருவிழாக்களும் விசேஷ பூஜைகளுடன் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
உள்ளூர் முருக பக்தர்கள், புரவலர்கள் பேருதவியுடன் கட்டப்பட்ட இக்கோவில் பழமையானதாகக் கருதப்படுகிறது.
தல அமைப்பு:
அழகிய இறை ஓவியங்களுடன் கூடிய இக்கோவிலின் கருவறையில் சுப்பிரமணிய சுவாமி கிழக்கு நோக்கி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறையின் எதிரில் அழகிய மயில் உள்ளது. கருவறையின் இருபுறமும் விநாயகர், தண்டாயுத்பாணி வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் மற்றும் பாம்பன் சுவாமிகள் வடக்கு நோக்கி அருள்கின்றனர். வெளிச்சுற்றில் நாகர்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் அன்னதான கூடம் ஒன்று கோவில் வளாகத்தில் உள்ளது.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, கார்த்திகை, சஷ்டி, செவ்வாய்
பிரார்த்தனை:
கேட்டது கிடைக்க, செல்வம் பெருக, திருமணம் நடைபெற, குழந்தை செல்வம் கிடைக்க, மன மகிழ்ச்சி உண்டாக, வாழ்வில் வெற்றி கிட்ட
நேர்த்திக்கடன்:
பால்குடம், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்
செல்வம் பெருக அருளும் திருவாரூர் நீடாமங்கலம் சுப்பிரமணிய சுவாமி திருப்பாதங்கள் பணிந்து வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1058 கேட்டதை தரும் திருவாரூர் நீடாமங்கலம் சுப்பிரமணிய சுவாமி
Comments
Post a Comment