கோவில் 1055 - சென்னை எண்ணூர் வடதிருச்செந்தூர் முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1055
வாழ்வில் ஏற்றம் தரும் சென்னை எண்ணூர் வடதிருச்செந்தூர் முருகன் கோவில்
28.4.2024 ஞாயிறு
அருள்மிகு வடதிருச்செந்தூர் முருகன் திருக்கோவில் [TM001120]
காமராஜ் நகர்
எண்ணூர்
சென்னை-600057
சென்னை மாவட்டம்
இருப்பிடம்: சென்னை சென்ட்ரல்/எழும்பூர் 20/21 கிமீ, கோயம்பேடு 29 கிமீ
மூலவர்: வடதிருச்செந்தூர் முருகன்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல மகிமை:
சென்னை மாநகரத்தினல் உள்ள சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 20 கிமீ இருக்கும் எண்ணூர் காமராஜ் நகரில் வாழ்வில் ஏற்றம் தரும் வடதிருச்செந்தூர் முருகன் கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் மூலவர் வடதிருச்செந்தூர் முருகன் வள்ளி, தெய்வானையுடன் அருள்புரிகின்றார். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து 21 கிமீ பிரயாணம் செய்தாலும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 29 கிமீ பிரயாணம் செய்தாலும் இத்திருக்கோவிலை அடையலாம்.
திருச்செந்தூர் திருத்தல முருகப்பெருமானை போல இக்கோவிலில் வீற்றிருக்கும் முருகனும் வேண்டிய வரங்களை அள்ளி வழங்குவதால் இக்கோவில் முருகன் வடதிருச்செந்தூர் முருகன் என்ற சிறப்பு பெயருடன் அழைக்கப்படுகின்றார். மேலும் தென் பகுதி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி இதுவாகும். இத்திருத்தலத்தில் கந்த சஷ்டி திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுகின்றது. பங்குனி உத்திரம், தைப்பூசம் உள்ளிட்ட முருகப்பெருமானின் திருவிழாக்களும் விமரிசையாக நடைபெறுகின்றன்.
தல வரலாறு:
பழமையான இக்கோவிலை தற்போது இந்து அறநிலையத் துறை நிர்வகித்து வருகிறது.
தல அமைப்பு:
இக்கோவிலின் கருவறைக்கு எதிரில் வேல், கொடிமரம், மயில், பலிபீடம் உள்ளன. கருவறையில் மூலவர் முருகப்பெருமான் வடதிருச்செந்தூர் முருகன் என்ற திருப்பெயருடன் வள்ளி, தெய்வானை சமேதராக கையில் வேலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, ஐயப்பன், சிவபெருமான், அகிலாண்டேஸ்வரி, பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் இக்கோவிலில் அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், கார்த்திகை, சஷ்டி, செவ்வாய், வெள்ளி
பிரார்த்தனை:
வாழ்வில் ஏற்றம் பெற, திருமண வாழ்க்கை கிடைக்க, குழந்தை வேண்டி, வேண்டிய வரங்கள் கிடைத்திட
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்
திறக்கும் நேரம்:
காலை 6-10 மாலை 5.30-8
திருமண வாழ்க்கை அருளும் சென்னை எண்ணூர் வடதிருச்செந்தூர் முருகன் திருப்பாதங்கள் பணிந்து வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
Comments
Post a Comment