கோவில் 1049 - சென்னை தாம்பரம் சானிடோரியம் கடப்பேரி சக்திவேல் முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1049
நினைத்ததை நிறைவேற்றித் தரும் சென்னை தாம்பரம் சானிடோரியம் கடப்பேரி சக்திவேல் முருகன் கோவில்
22.4.2024 திங்கள்
அருள்மிகு சக்திவேல் முருகன் திருக்கோவில்
கடப்பேரி
தாம்பரம் சானிடோரியம்
சென்னை-600047
செங்கல்பட்டு மாவட்டம்
இருப்பிடம்: தாம்பரம் 7 கிமீ, கோயம்பேடு 22 கிமீ, சென்ட்ரல் 25 கிமீ
மூலவர்: சக்திவேல் முருகன்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல மகிமை:
சென்னை மாநகரில் உள்ள தாம்பரத்திலிருந்து 7 கிமீ தொலைவில் கடப்பேரி (தாம்பரம் சானிடோரியம் மற்றும் சென்னை ஏற்றுமதி மண்டலம் அருகில்) பகுதியில் உள்ள பச்சைமலை உச்சியில் நினைத்ததை நிறைவேற்றித் தரும் சக்திவேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள கடப்பேரி சக்திவேல் முருகன் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத சக்திவேல் முருகன் அருள்புரிகின்றார். கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 22 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் அல்லது சென்னை சென்ட்ரலிலிருந்து 25 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சக்திவேல் முருகன் கோவிலை அடையலாம்.
கடினமான, செங்குத்தான மலைப்பகுதியில் ஏறி செல்ல வேண்டிய இக்கோவிலுக்கு அனைவரும் செல்ல சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மன உறுதியுள்ள பக்தர்கள் மற்றும் மலையேற்ற பயிற்சியாளர்கள் (Trekking) மட்டுமே இக்கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை தரிசித்து மகிழ முடியும். எனவே விசேஷ நாட்களில் பக்தர்கள் வருகின்றனர்.
தல வரலாறு:
சிந்தாமணி விநாயகர் மற்றும் சக்திவேல் முருகன் கோவில் 09.02.1997-ல் அடிக்கல் நாட்டப்பட்டது.
தல அமைப்பு:
பச்சைமலை உச்சியில் உள்ள கோவிலுக்கு செல்ல கயிற்றைப் பிடித்து கவனமாக ஏறிச் செல்ல வேண்டும். வழியில் சிந்தாமணி விநாயகர் தனி சந்நிதியில் அருள்பாலிக்கின்றார். மலையின் மேல் மூலவர் சக்திவேல் முருகன் வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். முருகப்பெருமானுக்கு எதிரில் மயில் மற்றும் பலிபீடம் உள்ளன.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, கார்த்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
நினைத்ததை நிறைவேற, பிணிகள் அகல, குடும்ப ஒற்றுமை ஓங்க, நல்லன நடக்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்
பிணிகள் அகல அருளும் சென்னை தாம்பரம் சானிடோரியம் கடப்பேரி சக்திவேல் முருகனை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
Comments
Post a Comment