கோவில் 1045 - சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1045
வாழ்வில் திருப்பங்கள் தரும் சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு சுப்பிரமணிய சுவாமி கோவில்
18.4.2024 வியாழன்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
வ உ சி நகர்
மேனாம்பேடு
அம்பத்தூர்
சென்னை-600053
சென்னை மாவட்டம்
இருப்பிடம்: கோயம்பேடு 11 கிமீ, சென்ட்ரல்/எழும்பூர் 16 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல மகிமை:
சென்னை மாநகரில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 11 கிமீ தொலைவில் இருக்கும் அம்பத்தூர் மேனாம்பேடு வ உ சி நகரில் வாழ்வில் திருப்பங்கள் தரும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. அம்பத்தூர் நகரத்தார் மூலம் நிர்வக்கிக்கப்படும் இக்கோவிலில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக அருளாட்சி செய்கின்றார். சென்னை சென்ட்ரல்/எழும்பூரில் இருந்து 16 கிமீ பிரயாணம் செய்தாலும் அம்பத்தூர் மேனாம்பேடு வ உ சி நகர் சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம்.
இக்கோவிலில் பங்குனி உத்திரம், தைப்பூசம் உள்ளிட்ட திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. பக்தர்கள் பால்குடம், காவடி ஏந்தி வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். பெரிய அன்னதான கூடம் இக்கோவிலில் இருப்பது சிறப்பம்சம்.
தல வரலாறு:
அம்பத்தூர் நகரத்தார் பக்தர்கள் சேர்ந்து கட்டிய இக்கோவிலை அம்பத்தூர் நகரத்தார் மகேஸ்வர பரிபாலன சபை என்ற குழு நிர்வகித்து வருகின்றது. தற்போது இக்கோவில் புனரமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
தல அமைப்பு:
அழகிய அமைப்புடன் கூடிய இக்கோவிலில் கருவறைக்கு முன் மயில், பீடம் உள்ளன. கருவறையில் சுப்பிரமணிய சுவாமி கைகளில் வேல் மற்றும் சேவற்கொடி ஏந்தி பொலிவான தோற்றத்தில் வள்ளி, தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். மேலும் கற்பக விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சிவபெருமான், அம்பாள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர். அழகிய உற்சவர்கள் இக்கோவிலில் அருள்பாலிக்கின்றனர்.
.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, கார்த்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
வாழ்வில் திருப்பங்கள் பெற, திருமணம் கைக்கூட, குழந்தைப்பேறு வேண்டி, சகல ஐஸ்வர்யங்கள் கிட்ட, கேட்டது கிடைக்க, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திருமணம் கைக்கூட அருளும் சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு சுப்பிரமணிய சுவாமியை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
Comments
Post a Comment