கோவில் 1044 - வேண்டியதை தந்தருளும் அரியலூர் கீழகுடியிருப்பு சுப்பிரமணிய சுவாமி
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1044
வேண்டியதை தந்தருளும் அரியலூர் கீழகுடியிருப்பு சுப்பிரமணிய சுவாமி கோவில்
17.4.2024 புதன்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM029324]
கீழகுடியிருப்பு-621804
உடையார்பாளையம் வட்டம்
அரியலூர் மாவட்டம்
இருப்பிடம்: ஜெயங்கொண்டம் 6 கிமீ, உடையார்பாளையம் 14 கிமீ, அரியலூர் 43 கிமீ,
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல மகிமை:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டத்திலிருந்து 6 கிமீ தொலைவில் இருக்கும் கீழகுடியிருப்பு கிராமத்தில் வேண்டியதை தந்தருளும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது, அரியலூர் நகரிலிருந்து 43 கிமீ அல்லது உடையார்பாளையத்திலிருந்து 14 கிமீ தூரம் பிரயாணம் செய்தாலும் கீழகுடியிருப்பு சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக அருள் புரிகின்றார்.
இக்கோவிலில் பங்குனி உத்திரம் தைப்பூசம் முதலான திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. இங்கு வீற்றிருக்கும் சுப்பிரமணிய சுவாமியை வழிபடுவோருக்கு திருமணத்தடை நீங்கும்.
தல வரலாறு:
பழமையான இத்திருக்கோவில் தற்போது இந்து அறநிலையத் துறை மூலம் நிர்வகிக்கப்படுகின்றது.
தல அமைப்பு:
இக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேல் கொண்டு வள்ளி, தெய்வானை சகிதம் நின்றகோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். முருகப்பெருமானுக்கெதிரில் மயில் மற்றும் பீடம் உள்ளன. மேலும் விநாயகர் உள்ளிட்ட தெய்வங்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, கார்த்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
வேண்டியது பெற, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, திருமணம் தடை நீங்க, குழந்தைப்பேறு கிட்ட, உடல் ஆரோக்கியம் வேண்டி
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்
நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க அருளும் அரியலூர் கீழகுடியிருப்பு சுப்பிரமணிய சுவாமியை வேண்டி தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
Comments
Post a Comment