கோவில் 1043 - அரியலூர் வானதிராயன்பட்டிணம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻                                                                                                               

தினம் ஒரு முருகன் ஆலயம்-1043 

ஏற்றங்கள் தரும் அரியலூர் வானதிராயன்பட்டிணம் சுப்பிரமணிய சுவாமி கோவில் 

16.4.2024 செவ்வாய்


அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM043732] 

வானதிராயன்பட்டிணம்-621804

உடையார்பாளையம் வட்டம்

அரியலூர் மாவட்டம் 

இருப்பிடம்: உடையார்பாளையம் 500 மீ, அரியலூர் 29 கிமீ, ஜெயங்கொண்டம் 8 கிமீ  


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை


தல மகிமை:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் உடையார்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 500 மீ தொலைவில் உள்ள வானதிராயன்பட்டிணம் கிராமத்தில் வாழ்வில் ஏற்றங்கள் தரும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது, மாவட்ட தலைநகர் அரியலூரிலிருந்து 29 கிமீ அல்லது ஜெயங்கொண்டத்திலிருந்து 8 கிமீ பிரயாணம் செய்தாலும் வானதிராயன்பட்டிணம் சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இக்கோவிலில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் அருளாட்சி செய்கின்றார்.


இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தி சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு செல்கின்றனர். மேலும் தைப்பூசம், கந்த சஷ்டி, கார்த்திகை, சஷ்டி உள்ளிட்ட திருநாட்களிலும் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.      


தல வரலாறு:

இக்கோவில் மிகவும் தொன்மையானதாகக் கருதப்படுகிறது. தற்போது இக்கோவில் இந்து அறநிலையத் துறை மூலம் நிர்வகிக்கப்படுகின்றது.


தல அமைப்பு:

அழகிய கோபுரத்துடன் கூடிய இக்கோவிலின் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலேந்தி வள்ளி, தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் கணபதி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.    


திருவிழா:

பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, கார்த்திகை, சஷ்டி


பிரார்த்தனை:

ஏற்றம் பெற, துன்பங்கள் நீங்க, திருமணத்தடை அகல, குழந்தை வரம் வேண்டி, குடும்பம் சிறக்க, நோய்கள் குணமாக, மன மகிழ்ச்சி கிடைத்திட


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்


திறக்கும் நேரம்:

காலை 10-12 மாலை 6-8


துன்பங்கள் நீக்கும் அரியலூர் வானதிராயன்பட்டிணம் சுப்பிரமணிய சுவாமியை மனமுருகி பிரார்த்திப்போம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1043 ஏற்றங்கள் தரும் அரியலூர் வானதிராயன்பட்டிணம் சுப்பிரமணிய சுவாமி கோவில்


படம் 2 - 1043 துன்பங்கள் நீக்கும் அரியலூர் வானதிராயன்பட்டிணம் சுப்பிரமணிய சுவாமி கோவில்





Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்