கோவில் 997 - திருப்பத்தூர் கொரட்டி காளத்தீஸ்வரர் கோவில் சண்முகர்
🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-997 [திருப்புகழ் தலம்] தடைகளை அகற்றும் திருப்பத்தூர் கொரட்டி காளத்தீஸ்வரர் கோவில் சண்முகர் 1.3.2024 வெள்ளி அருள்மிகு காளத்தீஸ்வரர் திருக்கோவில் [TM003988] திருப்புகழ் தலம் [குறட்டி] கொரட்டி-635602 திருப்பத்தூர் மாவட்டம் இருப்பிடம்: திருப்பத்தூர் 8 கிமீ மூலவர்: காளத்தீஸ்வரர் அம்பாள்: ஞானப்பூங்கோதை திருப்புகழ் நாயகர்: சண்முகர் தேவியர்: வள்ளி, தெய்வானை தல விருட்சம்: வில்வமரம் தீர்த்தம்: ஜம்பு நதி புராணப்பெயர்: குறட்டி பாடியவர்: அருணகிரிநாதர் (2) தல மகிமை: திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர்-ஊத்தங்கரை சாலையில் திருப்பத்தூரிலிருந்து 8 கிமீ-ல் தொலைவில் இருக்கும் கொரட்டி [குறட்டி திருத்தலம்] என்ற கிராமத்தில் தடைகளை அகற்றும் காளத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு காளத்தீஸ்வரர் அம்பாள் ஞானப்பூங்கோதையுடன் அருளாட்சி புரிந்து வருகின்றார். திருக்காளத்தி (காளஹஸ்தி) போல சர்ப்ப தோஷப் பரிகாரத் தலமாக உள்ளது. தட்சிண வாயுத்தலம் என போற்றப்படுகிறது. திருக்காளத்தியில் நடைபெறும் அனைத்து பரிகார பூஜைகளும் இங்கும் நடைபெறுகின்றன. ஆடிக்கிருத்திகை திருவிழா ஒரு நாளும...