கோவில் 967 - கர்நாடகா நிம்பபுரம் முருகன் கோவில் அரூப முருகப்பெருமான்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-967 [திருப்புகழ் தலம்]
வீடு பேறு தந்தருளும் கர்நாடகா நிம்பபுரம் முருகன் கோவில் அரூப முருகப்பெருமான்
31.1.2024 புதன்
அருள்மிகு முருகன் திருக்கோவில்
திருப்புகழ் தலம்
நிம்பபுரம் [Nimbapura]-583213
ஹோஸ்பெட் தாலுகா [Hospet Taluk]
பெல்லாரி மாவட்டம் [Bellary District]
கர்நாடகா மாநிலம் [Karnataka]
இருப்பிடம்: ஹோஸ்பெட் 15 கிமீ, பெல்லாரி 66 கிமீ
திருப்புகழ் நாயகர்: முருகப்பெருமான் [அரூபம்]
பாடியவர்: அருணகிரிநாதர் (1)
தல மகிமை:
கர்நாடகா மாநிலம் பெல்லாரி மாவட்டம் ஹோஸ்பெட் தாலுகா ஹோஸ்பெட் நகரிலிருந்து 15 கிமீ தொலைவில் வீடு பேறு தந்தருளும் அரூப வடிவ முருகப்பெருமான் குடியிருக்கும் நிம்பபுரம் திருத்தலம் உள்ளது. ஹம்பி நருக்கு அருகில் நிம்பபுரம் உள்ளது.
அருணகிரிநாதர் காலத்தில் சிறந்து விளங்கிய இத்திருத்தலம் தற்போது இடிபாடுகளை கொண்ட பகுதியாக உள்ளது என்று திருப்புகழ் அறிஞர் வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன் குறிப்பிடுகிறார். அருணகிரிநாதர் இத்திருத்தலத்தில் அப்போது இருந்த முருகப்பெருமானை நோக்கி ஒரு திருப்புகழ் பாடல் பாடியுள்ளார்.
வீடு பேறு வேண்டும் என வேண்டுகின்ற இப்பாடல் “அஞ்சுவித பூத முங்கரண நாலு மந்திபகல் யாது ...... மறியாத” என்று தொடங்கி “விம்பமதில் சூழு நிம்பபுர வாண விண்டலம கீபர் ...... பெருமாளே” என்று சிறப்புற முடிக்கிறார். ‘வள்ளியைத் தேடி வந்த உன் திருவடித் தாமரையை யான் பாடுவதற்கு வண்தமிழ் தா’. என்று வேண்டுகிறார்.
தல வரலாறு:
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு துங்கபத்திரை நதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் நிம்பபுரம் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிரது. அங்கிருந்த மக்கள் தற்போது அருகில் உள்ள ஆனே குந்தியில் வாழ்கின்றனர். இங்கு வாழைத்தோட்டங்களை பராமரிக்கும் சமயத்தில் கோவில்களின் சின்னங்கள், சிவலிங்கங்கள் கிடைத்தன, மேலும் தேடும் முயற்சி நடக்கின்றன.
தல அமைப்பு:
சிதிலமடைந்த இத்திருத்தல்த்தில் திருப்புகழ் தெய்வம் முருகப்பெருமான் அரூபமாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
திருவிழா:
-
பிரார்த்தனை:
வீடு பேறு அடைய, வேண்டுவன கிடைக்க
திறக்கும் நேரம்:
-
வேண்டுவன கிடைக்க அருளும் கர்நாடகா நிம்பபுரம் முருகன் கோவில் அரூப முருகப்பெருமானை போற்றி தொழுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 967 வீடு பேறு தந்தருளும் கர்நாடகா நிம்பபுரம் முருகன் கோவில் அரூப முருகப்பெருமான் திருப்புகழ் திருத்தலம்
Comments
Post a Comment