Posts

Showing posts from January, 2024

கோவில் 968 - ஆந்திரா திருப்பதி கபிலேஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-968 [திருப்புகழ் தலம்] வேண்டும் வரமளிக்கும் ஆந்திரா திருப்பதி கபிலேஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி 1.2.2024 வியாழன் அருள்மிகு கபிலேஸ்வரர் திருக்கோவில் திருப்புகழ் தலம் திருப்பதி [Tirupati]-517501 ஆந்திரா மாநிலம் [Andhra] இருப்பிடம்: கீழ் திருப்பதி 3 கிமீ, சென்னை 145 கிமீ மூலவர்: கபிலேஸ்வரர், கபிலேஸ்வர சுவாமி அம்பாள்: காமாட்சியம்மை திருப்புகழ் நாயகர்: சுப்பிரமணிய சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தீர்த்தம்: கபில தீர்த்தம் புராணப்பெயர்கள்: திருமலை, திருவேங்கடம், வேங்கடமலை, திருவேங்கடமலை, திருவேங்கடமாமலை பாடியவர்: அருணகிரிநாதர் (6) தல மகிமை: ஆந்திரா மாநிலம் திருப்பதி திருத்தலத்தில் கீழ் திருப்பதியிலிருந்து 3 கிமீ தொலைவில் வேண்டும் வரமளிக்கும் சிறப்பு மிக்க கபிலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கபில முனிவரால பிரதிஷ்டை செய்யப்பட்ட மூலவர் கபிலேஸ்வரர் காமட்சியம்மையுடன் அருளிகின்றார். இத்தலத்தில் அருணகிரிநாதர் திருவேங்கட முருகனை நோக்கி திருப்புகழ் பாடல் இயற்றியுள்ளார். இதன் புராணப்பெயர்கள் திருமலை, திருவேங்கடம், வேங்கடமலை, திருவேங்கடமலை, திருவேங்கடமாமலை ஆகும். த

கோவில் 967 - கர்நாடகா நிம்பபுரம் முருகன் கோவில் அரூப முருகப்பெருமான்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-967 [திருப்புகழ் தலம்] வீடு பேறு தந்தருளும் கர்நாடகா நிம்பபுரம் முருகன் கோவில் அரூப முருகப்பெருமான் 31.1.2024 புதன் அருள்மிகு முருகன் திருக்கோவில் திருப்புகழ் தலம் நிம்பபுரம் [Nimbapura]-583213 ஹோஸ்பெட் தாலுகா [Hospet Taluk] பெல்லாரி மாவட்டம் [Bellary District] கர்நாடகா மாநிலம் [Karnataka] இருப்பிடம்: ஹோஸ்பெட் 15 கிமீ, பெல்லாரி 66 கிமீ திருப்புகழ் நாயகர்: முருகப்பெருமான் [அரூபம்] பாடியவர்: அருணகிரிநாதர் (1) தல மகிமை: கர்நாடகா மாநிலம் பெல்லாரி மாவட்டம் ஹோஸ்பெட் தாலுகா ஹோஸ்பெட் நகரிலிருந்து 15 கிமீ தொலைவில் வீடு பேறு தந்தருளும் அரூப வடிவ முருகப்பெருமான் குடியிருக்கும் நிம்பபுரம் திருத்தலம் உள்ளது. ஹம்பி நருக்கு அருகில் நிம்பபுரம் உள்ளது. அருணகிரிநாதர் காலத்தில் சிறந்து விளங்கிய இத்திருத்தலம் தற்போது இடிபாடுகளை கொண்ட பகுதியாக உள்ளது என்று திருப்புகழ் அறிஞர் வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன் குறிப்பிடுகிறார். அருணகிரிநாதர் இத்திருத்தலத்தில் அப்போது இருந்த முருகப்பெருமானை நோக்கி ஒரு திருப்புகழ் பாடல் பாடியுள்ளார். வீடு பேறு வேண்டும் என வேண்டுகின்ற இப்பாடல் “அஞ

கோவில் 966 - உத்தர்காண்ட் ஹரித்வார் கனகல் தக்ஷேஸ்வர் மகாதேவர் கோவில் அரூப முருகப்பெருமான்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-966 [திருப்புகழ் தலம்] முக்தி தந்தருளும் உத்தர்காண்ட் ஹரித்வார் கனகல் தக்ஷேஸ்வர் மகாதேவர் கோவில் அரூப முருகப்பெருமான் 30.1.2024 செவ்வாய் அருள்மிகு தக்ஷேஸ்வர் மகாதேவர் திருக்கோவில் திருப்புகழ் தலம் கனகல் [Kankhal] ஹரித்வார் [Haridwar]-249407 [மாயாபுரி] உத்தர்காண்ட் மாநிலம் [Uttarakhand] இருப்பிடம்: ஹரித்வார் 6 கிமீ, டில்லி 236 கிமீ மூலவர்: தக்ஷேஸ்வர் மகாதேவர், தட்சிணேஸ்வரர் மகாதேவர் அம்மன்: சதி தேவி திருப்புகழ் நாயகர்: முருகப்பெருமான் [அரூபம்] தீர்த்தம்: கங்கை புராணப்பெயர்: மாயாபுரி பாடியவர்: அருணகிரிநாதர் (1) பழமை: 1810 தல மகிமை: உத்தர்காண்ட் மாநிலம் கோவில் நகரம் ஹரித்வாரிலிருந்து 6 கிமீ தொலைவில் இருக்கும் கனகல் பகுதியில் முக்தி தந்தருளும் தக்ஷேஸ்வர் மகாதேவர் கோவில் அமைந்துள்ளது. புது டில்லியிலிருந்து 236 கிமீ பிரயாணம் செய்தால் Char Dham எனப்படும் 4 புனிதக் கோவில்களான ஹரித்வார் திருத்தலத்தை அடையலாம். இக்கோவிலில் தக்ஷேஸ்வர் மகாதேவர் பார்வதி தேவி (சதி) உடன் அருளாட்சி செய்கின்றார். சவான் மாதம் [Sawan Month/ஆடி மாதம்/ஜூலை அல்லது ஆகஸ்ட்] சிவபெருமான் இங்

கோவில் 965 - திருக்கயிலை மலை கைலாசநாதர் கோவில் முருகப்பெருமான்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-965 [திருப்புகழ் தலம்] சிவலோக பதவி தந்தருளும் திருக்கயிலை மலை கைலாசநாதர் கோவில் முருகப்பெருமான் 29.1.2024 திங்கள் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில் திருப்புகழ் தலம் திருக்கயிலை மலை [Mount Kailash] [திருநொடித்தான்மலை] திபெத் [Tibet] சீனா [China] இருப்பிடம்: டில்லி 480 கிமீ மூலவர்: கைலாசநாதர், பரமசிவன், சிவபெருமான் (எல்லா திருநாமங்கள்) அம்மன்: பார்வதி தேவி (எல்லா திருநாமங்கள்) திருப்புகழ் நாயகர்: முருகப்பெருமான் தீர்த்தம்: மானச சரோவரம், சிந்து, கங்கை புராணப்பெயர்கள்: கயிலாயம், திருக்கயிலாயம், வெள்ளிமலை, கயிலை மலை, வெள்ளிவெற்பு, ரசதகிரி, திருநொடித்தான்மலை பாடியவர்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், அருணகிரிநாதர் (6) தல மகிமை: கயிலாயம், திருக்கயிலாயம், வெள்ளிமலை, கயிலை மலை, வெள்ளிவெற்பு, ரசதகிரி, திருநொடித்தான்மலை என்றெல்லாம் போற்றப் பெறும் திருக்கயிலை மலை [Mount Kailash] இமயமலைச் சிகரங்களில் ஒப்பற்றதும், புனிதமானதும் ஆகும். திபெத்தை சார்ந்த பகுதியில் இம்மலை அமைந்துள்ளது. அல்மோராவிலிருந்து புறப்பட்டு லிப்புத்தடாகக் கணவாய் வழியே கயிலை மலையை அ

கோவில் 964 - மயிலாடுதுறை திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் முருகப்பெருமான்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-964 [திருப்புகழ் தலம்] ஆயுள் விருத்தி தரும் மயிலாடுதுறை திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் முருகப்பெருமான் 28.1.2024 ஞாயிறு அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் திருப்புகழ் தலம் திருக்கடையூர்-609311 (திருக்கடவூர்) மயிலாடுதுறை மாவட்டம் இருப்பிடம்: மயிலாடுதுறை 21 கிமீ, சீர்காழி 24 கிமீ மூலவர்: அமிர்தகடேஸ்வரர் அம்மன்: அபிராமி அம்மன் உற்சவர்: காலசம்ஹார மூர்த்தி திருப்புகழ் நாயகர்: முருகப்பெருமான் தேவியர்: வள்ளி, தெய்வானை தல விருட்சம்: வில்வம், ஜாதி தீர்த்தம்: அமிர்த புஷ்கரிணி, கங்கை தீர்த்தம், சிவகங்கை புராணப்பெயர்கள்: திருக்கடவூர் பாடியவர்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், அருணகிரிநாதர் (2) தல மகிமை: மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரிலிருந்து தென்கிழக்கே 21 கிமீ தொலைவில் இருக்கும் திருக்கடையூர் திருத்தலத்தில் (திருக்கடவூர்) எமபயம் போக்கி நீண்ட ஆயுளை பக்தா்களுக்கு அருளும் அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சீர்காழியிலிருந்து 24 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலை அடையலாம். இக்கோவில் இறைவனாக அமிர்தகட

கோவில் 963 - நாகப்பட்டினம் காயரோகணேஸ்வரர் கோவில் ஆறுமுகப்பெருமான்

Image
  🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-963 [திருப்புகழ் தலம்] சர்வ தோஷங்கள் நிவர்த்தியடைய அருளும் நாகப்பட்டினம் காயரோகணேஸ்வரர் கோவில் ஆறுமுகப்பெருமான் 27.1.2024 சனி அருள்மிகு காயரோகணேஸ்வரர் திருக்கோவில் திருப்புகழ் தலம் நாகப்பட்டினம்-611001 நாகப்பட்டினம் மாவட்டம் இருப்பிடம்: திருவாரூர் 28 கிமீ, காரைக்கால் 20 கிமீ மூலவர்: காயரோகணேஸ்வரர் அம்மன்: நீலாயதாட்சி உற்சவர்: சந்திரசேகரர் திருப்புகழ் நாயகர்: ஆறுமுகப்பெருமான் தேவியர்: வள்ளி, தெய்வானை தல விருட்சம்: மாமரம் தீர்த்தம்: புண்டரீக தீர்த்தம் புராணப்பெயர்கள்: நாகைக்காரோணம், திருநாகைக்காரோணம், சேஷபுரம் பாடியவர்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், அருணகிரிநாதர் (3) தல மகிமை: நாகப்பட்டினம் நகரின் மையத்தில் சர்வ தோஷங்கள் நிவர்த்தியருளும் காயரோகணேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. நாகப்பட்டினம் ரயில் நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவிலும், திருவாரூர் திருத்தலத்திலிருந்து 28 கிமீ பிரயாணம் செய்தாலும், காரைக்கால் திருத்தலத்திலிருந்து 20 கிமீ

கோவில் 962 - மயிலாடுதுறை சீர்காழி சட்டைநாதர் கோவில் முருகப்பெருமான்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-962 [திருப்புகழ் தலம்] ஞானத்தை அள்ளி வழங்கும் மயிலாடுதுறை சீர்காழி சட்டைநாதர் கோவில் முருகப்பெருமான் 26.1.2024 வெள்ளி அருள்மிகு சட்டைநாதர் திருக்கோவில் திருப்புகழ் தலம் சீர்காழி-609110 மயிலாடுதுறை மாவட்டம் இருப்பிடம்: மயிலாடுதுறை 20 கிமீ, சிதம்பரம் 19 கிமீ மூலவர்: சட்டைநாதர், பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர் அம்மன்: பெரியநாயகி, திருநிலைநாயகி உற்சவர்: சோமாஸ்கந்தர் திருப்புகழ் நாயகர்: முருகப்பெருமான் தேவியர்: வள்ளி, தெய்வானை தல விருட்சம்: பாரிஜாதம், பவளமல்லி தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம் முதலாக 22 தீர்த்தங்கள் புராணப்பெயர்கள்: பிரம்மபுரம் தோணிபுரம், வேணுபுரம், பிரம்மபுரம் பாடியவர்: திருஞானசம்பந்தர் (67), திருநாவுக்கரசர் (3), சுந்தரர் (1), மாணிக்கவாசகர், அருணகிரிநாதர் (14), கணநாதர், நம்பியாண்டார் நம்பிகள், பட்டினத்தார், சேக்கிழார், அருணாசல கவிராயர், மாரிமுத்தா பிள்ளை, முத்து தாண்டவ தீட்சிதர் தல மகிமை: மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரிலிருந்து வடக்கே 20 கிமீ தொலைவில் இருக்கும் சீர்காழி திருத்தலத்தில் ஞானங்களை அள்ளி வழங்கும் சட்டைநாதர் கோவில் அமைந்துள்ளது