கோவில் 861 - விழுப்புரம் ஒதியத்தூர் அறுபடை முருகன் கோவில்

 🙏🏻🙏🏻 

தினம் ஒரு முருகன் ஆலயம்-861

வேண்டுதல்களை நிறைவேற்றும் விழுப்புரம் ஒதியத்தூர் அறுபடை முருகன் கோவில்

17.10.2023 செவ்வாய்


அருள்மிகு அறுபடை முருகன் திருக்கோவில்

ஒதியத்தூர்-605701

[ஒடியாத்தூர்]

கண்டாச்சிபுரம் தாலுகா

விழுப்புரம் மாவட்டம்

இருப்பிடம்: விழுப்புரம் 25 கிமீ, திருவண்ணாமலை 40 கிமீ


மூலவர்: அறுபடை முருகன்

தேவியர்: வள்ளி, தெய்வானை

உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை


தலமகிமை:

விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம்-திருவண்ணாமலை சாலையில் கண்டாச்சிபுரம் தாலுகாவில் வேண்டுதல்களை நிறைவேற்றும் ஒதியத்தூர் அறுபடை முருகன் கோவில் அமைந்துள்ளது. திருவண்ணாமலையிலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ள கண்டாச்சிபுரம் அடுத்து ஒதியத்தூர் கிராமத்தில் அறுபடை முருகன் கோவில் அமைந்துள்ளது.


இக்கோவிலில் அறுபடை வீட்டு முருகபெருமானும் வீற்றிருப்பதால், ஆறுபடை முருகன் கோவில்களில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. மேலும் சிறப்பம்சமாக இக்கோவிலில் நவக்கிரகங்கள் மற்ற கோவில்களை போலன்றி தனித் தனியே தத்தம் துணவியருடன் வீற்றிருக்கின்றனர். சூரிய பகவான் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் தன் இரு துணவியருடன் அருள்கின்றார். எனவே தோஷங்கள் அகல பக்தர்கள் நவக்கிரக தெய்வங்களை தனியே சுற்றி வந்து வழிபடுகின்றனர்.

தல வரலாறு:

பல்லாண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் வேல் வைத்து பக்தர்கள் வழிபட்டு வந்தனர். 1998-ல் இக்கோவிலை எடுத்து கட்டியதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். பின்னர் கோவில் புனரமைக்கப்பட்டு அறுபடை வீட்டு முருகப்பெருமான் மற்றும் தனி நவக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.


தல அமைப்பு:

விழுப்புரம் மாவட்டத்திலேயே இக்கோவிலில் மட்டும்தான் அறுகோண வடிவில் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணிகை, பழமுதிர்சோலை என ஆறுபடை வீட்டு தெய்வங்களும் இங்கு தனி சந்நிதிகளில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். எனவே அறுபடை வீடுகளில் வழிபட்டால் கிடைத்திடும் நற்பலன்கள் யாவும் இத்தலத்தில் முருகப்பெருமானை வழிபட்டால் கிடைத்திடும் என்பது நம்பிக்கை. விநாயகர் வீற்றிருந்து அருள்கின்றார். இக்கோவிலில் நவக்கிரக தெய்வங்கள் தத்தம் தேவியருடன் தனித் தனியாக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.


திருவிழா:

பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், கிருத்திகை, சஷ்டி,


பிரார்த்தனை:

வேண்டுதல் நிறைவேற, திருமணம் நடைபெற, குழந்தை வேண்டி, செல்வம் சேர, தோஷங்கள் அகல


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்


திருமணம் நடைபெற அருளும் விழுப்புரம் ஒதியத்தூர் அறுபடை முருகனை மனமுருகி வழிபடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 861 வேண்டுதல்களை நிறைவேற்றும் விழுப்புரம் ஒதியத்தூர் அறுபடை முருகன்


படம் 2 - 861 வேண்டுதல்களை நிறைவேற்றும் விழுப்புரம் ஒதியத்தூர் அறுபடை முருகன் கோவில்






Comments

Post a Comment

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்