கோவில் - 748 இலங்கை யாழ்ப்பாணம் ராமாவில் கந்தசுவாமி கோவில்

 🙏🏻🙏🏻                                                                                                                                                தினம் ஒரு முருகன் ஆலயம்-748

நினைத்ததை நிறைவேற்றி தரும் இலங்கை யாழ்ப்பாணம் ராமாவில் கந்தசுவாமி கோவில்

26.6.2023 திங்கள்


அருள்மிகு கந்தசுவாமி திருக்கோவில்

யாழ்ப்பாணம்-கண்டி சாலை

ராமாவில் (Ramavil)

யாழ்ப்பாணம் மாவட்டம் (Jafina)

இலங்கை (Sri Lanka)

இருப்பிடம்: யாழ்ப்பாணம் 22 கிமீ


மூலவர்: கந்தசுவாமி

உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை


தலமகிமை:

இலங்கை வடமாகாணம் யாழ்ப்பாணம் மாவட்டம் யாழ்ப்பாணம்-கண்டி நெடுஞ்சாலையில் யாழ்ப்பாணம் நகரிலிருந்து 22 கிமீ தொலைவில் ராமாவில் கிராமத்தில் நினைத்தது நிறைவேற்றும் கந்தசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகப்பெருமான், கந்தசுவாமியாக வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கின்றார்.


ஐப்பசி மாதத்தில் வரும் கந்த சஷ்டி ஆறு நாட்களும் அபிஷேகமும், உற்சவமும் நடைபெற்று ஆறாம் நாள் சூரசம்ஹார நிகழ்வும், ஏழாம் நாள் திருக்கல்யாணமும் மிகவும் விமரிசையாக நடைபெறுகின்றது. ஒவ்வொரு கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானுக்கு விஷேச பூஜைகள் நடைபெறுகின்றது. ஆனி மாத அமாவாசைத் திதியை அந்தமாகக் கொண்டு 10 தினங்கள் மகோற்சவம் நடைபெறுகின்றது. மாசி மாதம் மகா சிவராத்திரி இரவு நான்கு சாமப் பூஜைகள் நடைபெறுகின்றன.


தல வரலாறு:

இப்பகுதியில் பழமையான, சிறப்பு மிக்க முருகப்பெருமான் கோவிலாக திகழ்கின்றது.


தல அமைப்பு:

அழகிய அமைப்புடன் கூடிய இக்கோவிலின் கருவறையில் மூலவராக கந்தசுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் முருகப்பெருமான், ஆறுமுகசுவாமியாகவும், முத்துக்குமாரசுவாமியாகவும் தனித் தனி சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். பரிவார தெய்வங்களாக விநாயகப்பெருமான், சிவபெருமான், சந்தானகோபலன், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், பைரவர் தனி சந்நிதிகளில் அருளுகின்றனர்.


திருவிழா:

கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், கிருத்திகை, ஆனி அமாவாசை 10 நாள் மகோற்சவம், மகா சிவாரத்திரி


பிரார்த்தனை:

நினைத்தது நிறைவேற, சந்தான பாக்கியம் அருள, திருமணம் வேண்டி, குடும்ப வாழ்வு சிறக்க


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்


சந்தான பாக்கியம் அருளும் இலங்கை யாழ்ப்பாணம் ராமாவில் கந்தசுவாமியை போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 748 நினைத்ததை நிறைவேற்றி தரும் இலங்கை யாழ்ப்பாணம் ராமாவில் கந்தசுவாமி சூரசம்ஹார புறப்பாடு


படம் 2 - 748 சந்தான பாக்கியம் அருளும் இலங்கை யாழ்ப்பாணம் ராமாவில் கந்தசுவாமி கோவில்





Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்