கோவில் 745 - இலங்கை மட்டக்களப்பு தாண்டியடி முருகன் கோவில்

 🙏🏻🙏🏻                                                                                                                                                தினம் ஒரு முருகன் ஆலயம்-745

வல்வினைகள் தீர்க்கும் இலங்கை மட்டக்களப்பு தாண்டியடி முருகன் கோவில்

23.6.2023 வெள்ளி


அருள்மிகு தாண்டியடி முருகன் திருக்கோவில்

தாண்டியடி (Thandiyadi)

புதுமண்டப்பத்தடி

மட்டக்களப்பு மாவட்டம் (Batticaola)

இலங்கை (Sri Lanka)

இருப்பிடம்: மட்டக்களப்பு 12 கிமீ


மூலவர்: முருகன்

உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை


தலமகிமை:

இலங்கை மட்டக்களப்பு மாவட்டம் மட்டக்களப்பு நகரிலிருந்து 12 கிமீ தொலைவில் வவுணத்தீவு பிரதேசத்தில் உள்ள புதுமண்டப்பத்தடி கிராமத்தில் தாண்டியடி பகுதியில் வல்வினைகள் தீர்க்கும் முருகன் கோவில் அமைந்துள்ளது. பழம்பெரும் வரலாற்றை கொண்ட இவ்வாலயத்தில் முருகன் குடிகொண்டு அருள்பாலிக்கின்றார். வயலும் வயல் சார்ந்த இடமும் ஆன மருதம் நிலத்தில் குடி கொண்டுள்ள முருகப்பெருமானை இங்கு வசிக்கும் மக்கள் இதய தெய்வமாக வணங்கி வழிபட்டு வருகின்றனர். கிராமத்தில் உள்ள தமிழ் மக்களை ஒற்றுமையுடனும் அறவழியுடனும் வாழ வைத்து வருகிறார் முருகப்பெருமான்.


இக்கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா மற்ற இலங்கை முருகன் கோவில்கள் போலவே சிறப்புடன் கொண்டாடப்படுகின்றது. வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட அனைத்து பண்டிகைகளும் விமரிசையாக நடைபெறுகின்றன.


தல வரலாறு:

மிகவும் பழமையான இந்த திருக்கோவில் புனரமைக்கப்பட்டு 27.01.2022 அன்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.


தல அமைப்பு:

அழகிய அமைப்புடன் கூடிய கோவிலில் பழனி முருகன் உட்பட பல வண்ண முருகப்பெருமான் சிற்பங்கள் மேல் சுவற்றில் வரையப்பட்டுள்ளன. கருவறையில் மூலவராக முருகன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், சிவன், அம்பாள், நவக்கிரகங்கள் என அனைத்து தெய்வங்களும் குடிகொண்டு அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கிருத்திகை, சஷ்டி


பிரார்த்தனை:

வல்வினைகள் தீர, ஒற்றுமை ஓங்க, நல்வழியில் வாழ, மன அமைதி பெற


நேர்த்திக்கடன்:

பால்குடம், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல், அன்னதானம்


நல்வழியில் வாழ வழிகாட்டும் இலங்கை மட்டக்களப்பு தாண்டியடி முருகப்பெருமானை போற்றி துதி பாடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 745 வல்வினைகள் தீர்க்கும் இலங்கை மட்டக்களப்பு தாண்டியடி முருகன்


படம் 2 - 745 நல்வழியில் வாழ வழிகாட்டும் இலங்கை மட்டக்களப்பு தாண்டியடி முருகன்



Comments