கோவில் 722 - சென்னை ஆவடி செந்தில்வேல் முருகன் கோவில்

 🙏🏻🙏🏻                                                                                                                                                 தினம் ஒரு முருகன் ஆலயம்-722

சிக்கல்கள் தீர்க்கும் சென்னை ஆவடி செந்தில்வேல் முருகன் கோவில்

31.5.2023 புதன்


அருள்மிகு செந்தில்வேல் முருகன் திருக்கோவில்

ஆவடி ரயில்நிலையம் சாலை

திருமலைராஜபுரம்

ஆவடி

சென்னை-600054

இருப்பிடம்: கோயம்பேடு 19 கிமீ, சென்ட்ரல் 26 கிமீ


மூலவர்: செந்தில்வேல் முருகன்

தேவியர்: வள்ளி, தெய்வானை

உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை


தலமகிமை:

சென்னை மாநகரில் கோயம்பேட்டிலிருந்து 19 கிமீ தொலைவிலும், சென்னை சென்ட்ரலிலிருந்து 26 கிமீ தொலைவிலும் உள்ள ஆவடி மாநகரில் சிக்கல்கள் தீர்க்கும் சென்னை ஆவடி செந்தில்வேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவர் செந்தில்வேல் முருகன் வள்ளி, தெய்வானை சமேதராக சிறப்புடன் அருள்புரிகின்றார்.


கந்த சஷ்டி பெருவிழாவினை ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து சிறப்பாக கொண்டாடுகின்றனர். அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாரதனைகள் தினமும் நடைபெறும். இவ்விழாவினைப் போல தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை என முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. மேலும் கிருத்திகை, சஷ்டி, செவ்வாய் திருநாட்களில் விசேஷ பூஜைகள் நடைபெறும்.

தல வரலாறு:

ஆவடி செந்தில்வேல் முருகன் கோவில் கும்பாபிஷேகம் ஆகம விதிகளின் படி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய சுவாமிகள் மற்றும் ஸ்ரீ சங்கர் விஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய சுவாமிகள் நல்லாசிகளோடு 05.02.1995-ல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவில் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றது.


தல அமைப்பு:

அழகிய வண்ண சிறபங்களுடன் கூடிய கோவில் கோபுரம் அருகில் தலவிருட்சம் அடியில் எல்லாம் வல்ல கணபதி வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். திருக்கோவில் கருவறையில் மூலவராக, முருகப்பெருமான், செந்தில்வேல் முருகன் என்ற திருப்பெயரில். வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு திருக்காட்சி தந்து அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், சிவபெருமான், அம்பாள், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள் மற்றும் பைரவர் தனித் தனி சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்


திருவிழா:

கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, கிருத்திகை, சஷ்டி, செவ்வாய்


பிரார்த்தனை:

சிக்கல்கள் தீர, இகபர சௌபாக்கியங்கள் வேண்டி, செல்வம் பெருக, தொழில் மேம்பட, திருமணத்தடை அகல, குழந்தை வேண்டி


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்


இகபர சௌபாக்கியங்கள் அருளும் சென்னை ஆவடி செந்தில்வேல் முருகன் திருவடிகளை சென்னி மேல் சூட்டி மகிழ்வோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 722 சிக்கல்கள் தீர்க்கும் சென்னை ஆவடி செந்தில்வேல் முருகன்


படம் 2 - 722 இகபர சௌபாக்கியங்கள் அருளும் சென்னை ஆவடி செந்தில்வேல் முருகன்



Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்