கோவில் 719 - கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியமொட்டூர் வெள்ளிமலை முருகன் கோவில்

 🙏🏻🙏🏻                                                                                                                                               தினம் ஒரு முருகன் ஆலயம்-719

நன்மைகள் தரும் கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியமொட்டூர் வெள்ளிமலை முருகன் கோவில்

28.5.2023 ஞாயிறு


அருள்மிகு வெள்ளிமலை முருகன் திருக்கோவில்

பெரியமொட்டூர்-635101

கிருஷ்ணகிரி மாவட்டம்

இருப்பிடம்: கிருஷ்ணகிரி 8 கிமீ


மூலவர்: வெள்ளிமலை முருகன்

தேவியர்: வள்ளி, தெய்வானை

உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை


தலமகிமை:

கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி நகரிலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ள பெரியமொட்டூரில் இருக்கும் வெள்ளிமலையில் நன்மைகள் தரும் வெள்ளிமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் வள்ளி, தெய்வானை சமேதராக முருகப்பெருமான் அருள் புரிகின்றார். 25 வருடங்கள் பழமையான இக்கோவில் புதியதாக கட்டப்பட்டு 25.5.2023-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது கூடுதல் சிறப்பம்சமாகும்.


மூன்று வருடங்களாக ஆடிக்கிருத்திகை திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. தைப்பூசமும் வெகு விமரிசையாக ந்டைபெறுகின்றது. இக்கோவிலில் திருமணம் நடைபெறுகிறது.

தல வரலாறு:

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளிமலையில் சுயம்புவாக கிடைத்த முருகனையும், வேல் ஒன்றை நட்டும் இவ்வூர் மக்கள் வழிபட்டு வந்தனர். 3 ஆண்டுகளுக்கு முன் தர்மகர்த்தா திரு. காளியப்பன் மற்றும் அறங்காவலர் குழு கூடி முருகப்பெருமானுக்கு கோவில் கட்ட முடிவு செய்தனர். புரவலர்கள் மற்றும் ஊர் மக்கள் காணிக்கையுடன் புதிய கோவிலை கட்டி 25.5.2023 அன்று சிறப்பான முறையில் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.


தல அமைப்பு:

வாகனங்கள் கோவிலுக்கு செல்லவும் வழி உள்ளது. புதியதாக நிர்மானிக்கப்பட்ட இக்கோவில் கருவறையில் மூலவராக முருகன், வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகப்பெருமான் தனி சந்தியில் அருள்பாலிக்கின்றார். ஆஞ்சநேயர் குடியமர்ந்து அருள்கின்றார். சுயம்பு முருகனும், உற்சவர் முருகப்பெருமானும் அருள்பாலிக்கின்றார்.

.

திருவிழா:

ஆடிக்கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, தைப்பூசம், கிருத்திகை, சஷ்டி,


பிரார்த்தனை:

நன்மை வேண்டி, கேட்டது கிடைக்க, தடைகள் நீங்க, மன நிம்மதி பெற, திருமணம், குழந்தை வரம் வேண்டி


நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்


கேட்டதை கொடுத்தருளும் கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியமொட்டூர் வெள்ளிமலை முருகனை போற்றிப் பாடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 719 நன்மைகள் தரும் கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியமொட்டூர் வெள்ளிமலை முருகன் கோவிலில் சுயம்பு முருகன், சுயம்பு விநாயகர், சுயம்பு ஆஞ்சநேயர்


படம் 2 - 719 கேட்டதை கொடுத்தருளும் கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியமொட்டூர் வெள்ளிமலை முருகன்



 

 



Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்