கோவில் 717 - மதுரை கோச்சடை மயில்வேல் முருகன் கோவில்

 🙏🏻🙏🏻                                                                                                                                                          தினம் ஒரு முருகன் ஆலயம்-717

வினைகள் தீர்க்கும் மதுரை கோச்சடை மயில்வேல் முருகன் கோவில்

26.5.2023 வெள்ளி


அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

மேலக்கால் ரோடு

கோச்சடை

மதுரை-625016

மதுரை மாவட்டம்

இருப்பிடம்: மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் 5 கிமீ

செல்: 9486891145


மூலவர்: மயில்வேல் முருகன்

உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை


தலமகிமை:

கோவில் நகரமான மதுரை மாநகரம் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவில் கோச்சடை பகுதியில் மேலக்கால் மெயின் சாலையில் வினைகள் தீர்க்கும் மயில்வேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. 2022-ல் கோச்சடை மயில்வேல் முருகன் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது.


இக்கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம் திருவிழாக்களும் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகளுடன் நடக்கின்றன. கிருத்திகை, சஷ்டி தினங்களில் விசேஷ பூஜைகள் உண்டு

தல வரலாறு:

ஆகம விதிகளின் படி திருக்கோவில் புனரமைக்கப்பட்டு, 28.08.22 ஞாயிறு இரவு 6.00 மணிக்கு கணபதி பூஜை, சங்கல்பம், கலச பூஜை, புண்யாகவாசனம், வாஸ்து பூஜை, அனுக்ஞை, காப்பு கட்டுதல், பாலிகா பூஜை, ஆச்சார்யவர்ணம், கலாஆகர்ஷணம், முதல் கால பூஜைகளுடன் தொடங்கின. அடுத்த 2 நாட்களுக்கும் யாகசாலை பூஜைகள் நடந்தன. 01.09.2022 வியாழக்கிழமை காலை 8-9.15 மணிக்கு மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.


தல அமைப்பு:

மூன்று நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் அழகிய அமைப்பில் உள்ளது. கருவறையில் முருகப்பெருமான், மயில்வேல் முருகன் என்ற திருப்பெயரில் நின்ற கோலத்தில் திருக்காட்சி அருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். விநாயர், பரமேஸ்வரர், பார்வதி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, ஆஞ்சநேயர், ஐயப்பன், லட்சுமி ஹயக்கீரிவர், எல்லாம் வல்ல சித்தர், நவக்கிரகங்கள் மற்றும் பைரவர் தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர். அழகிய சஷ்டி மண்டபமும் இத்திருக்கோவிலில் உள்ளது.


திருவிழா:

பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம், கிருத்திகை, சஷ்டி,


பிரார்த்தனை:

வினைகள் தீர, மன மைதி பெற, வாழ்வில் வெற்றியடைய, கேட்டது கிடைக்க, குழந்தை, திருமணம் வேண்டி, கல்வி, ஞானம் சிறக்க


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்


திறக்கும் நேரம்:

காலை 6.30-10.30 மாலை 4.30-8.30


மன அமைதி தந்தருளும் மதுரை கோச்சடை மயில்வேல் முருகனை சிந்தை மகிழ வேண்டிடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 717 வினைகள் தீர்க்கும் மதுரை கோச்சடை மயில்வேல் முருகன்


படம் 2 - 717 மன அமைதி தந்தருளும் மதுரை கோச்சடை மயில்வேல் முருகன்




Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்