கோவில் 712 - திண்டுக்கல் மாவட்டம் வேம்பார்பட்டி பாலமுருகன் கோவில்
🙏🏻🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-712
வல்வினைகள் தீர்க்கும் திண்டுக்கல் மாவட்டம் வேம்பார்பட்டி பாலமுருகன் கோவில்
21.5.2023 ஞாயிறு
அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில்
வேம்பார்பட்டி-624308
அரவக்குறிச்சி வட்டம்
திண்டுக்கல் மாவட்டம்
இருப்பிடம்: திண்டுக்கல் 24 கிமீ
மூலவர்: பாலமுருகன்
உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை
தலமகிமை:
திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாநகரிலிருந்து கிழக்கே 24 கிமீ தொலைவில் வல்வினைகள் தீர்க்கும் வேம்பார்பட்டி பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகப்பெருமான், பாலமுருகனாக அருள்பாலிக்கின்றார்.
இக்கோவிலில் பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி என முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. கிருத்திகை, சஷ்டி தினங்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
உள்ளூர் புரவலர்கள் மற்றும் முருக பக்தர்கள் உதவியுடன் கட்டப்பட்ட இத்திருகோவிலின் கும்பாபிஷேகம் 14.06.2004-ல் சிறப்பாக நடைபெற்றது. இக்கோவிலில் முருகப்பெருமான், பாலமுருகனாக அருள்பாலிக்கின்றார்.
தல அமைப்பு:
இத்திருக்கோவிலின் கருவறையில் மூலவர் பாலமுருகன் என்ற திருப்பெயருடன் பக்தர்களுக்கு நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றார். உற்சவர் முருகன் வள்ளி, தெய்வான சமேதராக அழகிய தோற்றம் கொண்டு அருள்பாலிக்கின்றார். வளாகத்தில் விநாயகர், சிவபெருமான், தட்சிணாமூர்த்தி, துர்க்கை உட்பட தெய்வங்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, கிருத்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
வல்வினைகள் தீர, சந்தான பாக்கியம் அருள, வேண்டியது கிடைக்க, நன்மைகள் நடக்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்
வேண்டியதை அளித்திடும் திண்டுக்கல் மாவட்டம் வேம்பார்பட்டி பாலமுருகனை பணிந்து வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 712 வல்வினைகள் தீர்க்கும் திண்டுக்கல் மாவட்டம் வேம்பார்பட்டி பாலமுருகன்
படம் 2 - 712 வேண்டியதை அளித்திடும் திண்டுக்கல் மாவட்டம் வேம்பார்பட்டி பாலமுருகன்
Comments
Post a Comment