கோவில் 710 - திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் பாலமுருகன் கோவில்
🙏🏻🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-710
பிரச்னைகளை தீர்த்தருளும் திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் பாலமுருகன் கோவில்
19.5.2023 வெள்ளி
அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில்
(அ/மி பாதபெருமாள் திருக்கோவில்)
கூடலூர் மெயின் ரோடு
முத்தரசநல்லூர்-620101
திருச்சி மாவட்டம்
இருப்பிடம்: திருச்சி மத்திய பேருந்து நிலையம் 12 கிமீ
செல்: 77085 17921
மூலவர்: பாலமுருகன்
உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை
தலமகிமை:
திருச்சி மாவட்டம் திருச்சி மாநகரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 12 கிமீ தொலைவில் பிரச்னைகளை தீர்த்தருளும் முத்தரசநல்லூர் பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. சிறப்பான இக்கோவிலில் பாலமுருகன் மூலவராக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.
இத்திருக்கோவிலில் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம் முதலான முருகப்பெருமானின் விசேஷங்கள் மிகவும் சிறப்பாக்க கொண்டாடப்படுகின்றது. கிருத்திகை, சஷ்டி முதலான விசேஷ தினங்ககளில் சிறப்பு தீபாரதனைகள் நடைபேறும்.
தல வரலாறு:
இக்கோவில் புரவலர்கள் மற்றும் ஊர் பக்தர்கள் உதவியுடன் இக்கோவில் எழுப்பப்பட்டது.
தல அமைப்பு:
இக்கோவில் கருவறையில் மூலவர் முருகப்பெருமான் பாலகனாக பாலமுருகன் என்ற திருப்பெயரில் வேல் தாங்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார், மேலும் விநாயகர், சிவபெருமான், நவக்கிரகங்கள் முதலான தெய்வங்களும் இக்கோவிலில் அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம், கிருத்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
பிரச்னைகள் தீர, கல்வி, ஞானம் சிறக்க, தீவினைகள் அகல, நல்லது நடக்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்
கல்வி, ஞானம் சிறக்க அருளும் திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் பாலமுருகனை பணிந்து வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 710 பிரச்னைகளை தீர்த்தருளும் திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் பாலமுருகன்
படம் 2 - 710 கல்வி, ஞானம் சிறக்க அருளும் திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் பாலமுருகன்
Comments
Post a Comment