கோவில் 709 - திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெரும்புதூர் முருகன் கோவில்

 🙏🏻🙏🏻                                                                                                                                                        தினம் ஒரு முருகன் ஆலயம்-709

மன அமைதி தந்தருளும் திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெரும்புதூர் முருகன் கோவில்

18.5.2023 வியாழன்


அருள்மிகு முருகன் திருக்கோவில்

பட்டறை பெரும்புதூர்-602001

திருவள்ளூர் மாவட்டம்

இருப்பிடம்: திருவள்ளூர் 11 கிமீ, திருத்தணி 30 கிமீ, சென்னை 57 கிமீ


மூலவர்: முருகன்

தேவியர்: வள்ளி, தெய்வானை

உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை

பழமை: 1000 ஆண்டுகள்


தலமகிமை:

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர்-திருத்தணி நெடுஞ்சாலையில் திருவள்ளூரிலிருந்து 11-வது கிமீ-ல் அமைந்துள்ள பட்டறை பெரும்புதூரில் மன அமைதி தந்தருளும் முருகன் கோவில் உள்ளது. மிகவும் பழமையான இத்திருக்கோவிலில் முருகப்பெருமான் தேவியர் சகிதம் அருள்பாலிக்கின்றார். திருத்தணிக்கு நடைபயணம் செல்லும் பக்தர்கள் இக்கோவிலில் இரவு தங்கி செல்கின்றனர்.


இக்கோவிலில் ஆடிக்கிருத்திகை, பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, தைப்பூசம் என அனைத்து திருவிழாக்களும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. கிருத்திகை மற்றும் சஷ்டி திருநாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

தல வரலாறு:

இக்கோவில் 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது என்று இக்கோவில் வரலாறு தெரிவிக்கிறது.


தல அமைப்பு:

பழங்கால கட்டிட அமைப்பைக் கொண்ட இக்கோவில் கருவறையில் மூலவராக முருகன் திருமணக் கோலத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக வலக்கை அபய வரமளித்தும், இடக்கரம் இடுப்பில் தாங்கியும், வேலேந்தி நின்ற கோலத்தில் காட்சியருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். விநாயகப்பெருமான் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

ஆடிக்கிருத்திகை, பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, தைப்பூசம், கிருத்திகை, சஷ்டி


பிரார்த்தனை:

மன அமைதி பெற, திருமண வரம் வேண்டி, சந்தான பாக்கியம் அருள, எண்ணியது நிறைவேற


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்


திருமண வரமருளும் திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெரும்புதூர் முருகனை மனமுருகி பிரார்த்திப்போம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻



படம் 1 - 709 மன அமைதி தந்தருளும் திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெரும்புதூர் முருகன்


படம் 2 - 709 திருமண வரமருளும் திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெரும்புதூர் முருகன்

Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்