கோவில் 708 - விழுப்புரம் மாவட்டம் பாவந்தூர் முருகன் கோவில்
🙏🏻🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-708
நல்வாழ்வு தரும் விழுப்புரம் மாவட்டம் பாவந்தூர் முருகன் கோவில்
17.5.2023 புதன்
அருள்மிகு முருகன் திருக்கோவில் [TM023222]
பாவந்தூர் (பாவண்டூர்)-607209
திருவெண்ணெய்நல்லூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம்
இருப்பிடம்: கள்ளக்குறிச்சி 79 கிமீ, திருவெண்ணெய்நல்லூர் 5 கிமீ, விழுப்புரம் 17 கிமீ, திருநாவலூர் 21 கிமீ, திருக்கோவிலூர் 23 கிமீ, உளுந்தூர்பேட்டை 36 கிமீ
மூலவர்: முருகன்
உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை
பழமை: 90 ஆண்டுகளுக்கு முன்னர்
தலமகிமை:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டம் திருக்கோவிலூர்-பண்ருட்டி சாலையில் திருக்கோவிலூரிலிருந்து 23-வது கிமீ-ல் உள்ள பாவந்தூர் (பாவண்டூர்) கிராமத்தில் நல்வாழ்வு அருளும் முருகன் கோவில் அமைந்துள்ளது. 90 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் முருகப்பெருமான் அருள்பாலிக்கின்றார்,
பிரசித்தி பெற்ற இந்த முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிக்கிருத்திகை பெருவிழா 11 நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஆடி பிரம்மோற்சவத்தின் போது ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு முருகப்பெருமானை வழிபட்டு நல்வாழ்வு பெற்று செல்கின்றனர். இந்த ஆண்டு 88-வது பிரம்மோற்சவம் 18.07.2022 அன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த ஆடிப் பெருவிழாவில் காவடி, ஆகாய செடல், மழு அடித்தல், தீ மிதித்தல், தேர் இழுத்தல் என்று பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர். முருகப்பெருமானின் அருளைப் பெற தொலைதூரங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு குவிந்து வருகின்றனர். பக்தியின் சக்தியை இங்கு உணரலாம். கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் முதலான முருகப்பெருமானின் திருநாட்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
தல வரலாறு:
இக்கோவில் 88 ஆண்டுகள் பழமையானது என்கின்றது வரலாறு. ஆடிப் பிரம்மோற்சவம் 89-வது ஆண்டாக இந்த ஆண்டு (2023) கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடதக்க அம்சமாகும்.
தல அமைப்பு:
இக்கோவிலில் நுழைந்தவுடன் வேல், பலிபீடம், கொடிக்கம்பம் உள்ளன. கருவறையில் மூலவராக முருகன் தெற்கு நோக்கியாவாறு நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலிக்கின்றார். அருகில் விநாயகர் அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
ஆடிக்கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, கிருத்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
நல்வாழ்வு பெற, வினைகள் நீங்க, குடும்ப ஐஸ்வர்யம் உண்டாக, நோய்கள் குணமாக, குழந்தை வரம், திருமண வரம் வேண்டி
நேர்த்திக்கடன்:
காவடி, ஆகாய செடல், மழு அடித்தல், தீ மிதித்தல், தேர் இழுத்தல் அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல், அன்னதானம்
வினைகள் நீக்கி அருளும் விழுப்புரம் மாவட்டம் பாவந்தூர் முருகனை பணிந்து தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 708 நல்வாழ்வு தரும் விழுப்புரம் மாவட்டம் பாவந்தூர் முருகன்
படம் 2 - 708 வினைகள் நீக்கி அருளும் விழுப்புரம் மாவட்டம் பாவந்தூர் முருகன்
Comments
Post a Comment