கோவில் 601 - சிவகங்கை குழந்தை வேலாயுத சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻                                                                                                                                                    தினம் ஒரு முருகன் ஆலயம்-601

சகல ஐஸ்வர்யங்களையும் அருளும் சிவகங்கை குழந்தை வேலாயுத சுவாமி கோவில்

30.1.2023 திங்கள்

அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோவில்

சிவகங்கை-630561

இருப்பிடம்: சிவகங்கை பேருந்து நிலையம் 1 கிமீ

செல்: 94898 04245

மூலவர்: குழந்தை வேலாயுத சுவாமி


தலமகிமை:

சிவகங்கை சீமையில் சிவகங்கை நகரம் பேருந்து நிலையத்திலிருந்து 1.1 கிமீ தொலைவில் சகல ஐஸ்வர்யங்களையும் அருளும் சிவகங்கை குழந்தை வேலாயுத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் 27.01.2023 வெள்ளியன்று மிக சிறப்பாக நடந்தேறியது.


இத்திருத்தலத்தில் தைப்பூசம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை தீபம், பங்குனி உத்திரம் முதலான திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. குழந்தை வேலாயுத சுவாமிக்கு அலங்காரங்கள் இக்கோவிலின் விசேஷ அம்சமாகும்.

தல வரலாறு:

சிறப்பு மிக்க குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் 2023 ஜனவரி 27-ல் நடைபெற்றது.


தல அமைப்பு:

முருகப்பெருமான் இத்திருக்கோவில் கருவறையில் குழந்தை வேலாயுத சுவாமி என்ற திருப்பெயரில் குழந்தை வடிவில் கையில் வேல் ஏந்தி நின்ற கோலத்தில் புன்னகை ததும்ப காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். முருகப்பெருமான் பல்வேறு அலங்காரங்களில் திருக்காட்சி அருளுவது சிறப்பம்சம். மேலும் விநாயகர், சிவபெருமான், அம்பாள், நவக்கிரகங்கள் முதலான தெய்வங்களும் அருள்கின்றனர். வனதுர்க்கை அலங்காரத்தில் ஜொலிப்பது சிறப்பம்சாகும். 


திருவிழா:

தைப்பூசம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை தீபம், பங்குனி உத்திரம்


பிரார்த்தனை:

சகல ஐஸ்வர்யங்கள் வேண்டி, வேண்டுவோருக்கு வேண்டியது கிடைக்க, கல்வி, ஞானம் மேம்பட,


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


வேண்டுவோருக்கு வேண்டியதை அருளும் சிவகங்கை குழந்தை வேலாயுத சுவாமியை வேண்டி வழிபடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻



படம் 1 - 601 சகல ஐஸ்வர்யங்களையும் அருளும் சிவகங்கை குழந்தை வேலாயுத சுவாமி


படம் 2 - 601 வேண்டுவோருக்கு வேண்டியதை அருளும் சிவகங்கை குழந்தை வேலாயுத சுவாமிக்கு வனதுர்க்கை அலங்காரம்

Comments