கோவில் 599 - ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் வேடந்தாங்கல் சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-599
நேர்மறை ஆற்றலை அள்ளித் தரும் ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் வேடந்தாங்கல் சுப்பிரமணிய சுவாமி கோவில்
28.1.2023 சனி
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
வேடந்தாங்கல்
பாணாவரம்-632505
ராணிப்பேட்டை மாவட்டம்
இருப்பிடம்: ராணிப்பேட்டை 27 கிமீ,
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
தலமகிமை:
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டையிலிருந்து 27 கிமீ தொலைவில் உள்ள பாணாவரம் அருகில் இருக்கும் வேடந்தாங்கல் எனும் கிராமத்து குன்றில் மேல் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. அருகில் மகேந்திரவாடி ஏரி இருப்பது கோவிலுக்கு மேலும் அழகு சேர்க்கிறது.
கோவிலுக்கு மேல் முருகனின் பாதம் போன்ற அமைப்பு பாறையில் இருப்பது சிறப்பு. கோவில் வளாகத்தில் 27 அடி உயர சுப்பிரமணிய சுவாமி சிலை அழகிய அமைப்புடன் உள்ளது. மேலும் கோவிலில் உள்ள சரவண பொய்கை குளத்தில் கல்லினால் செய்யப்பட்ட 6 சிறிய தாமரை பூ வடிவ அமைப்பில் உள்ள 6 குழந்தை முருகன் சிலைகள் இருப்பது சிறப்பம்சம். ஆடிக்கிருத்திகை விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் அனைத்து முருகன் விசேஷ நாட்களும் விமரிசையாக நடக்கிறது. கோவில் கட்டும் போது மயில் ஒன்று இங்கு வந்து முருகனை தரிசிப்பது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடப்பது அதிசயமாக கருதப்படுகிறது.
தல வரலாறு:
கடந்த 6 மாதங்களுக்கு முன் புதியதாக கட்டப்பட்ட இத்திருக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இங்குள்ள குன்றின் மீது முருகனின் பாதம் பதிந்ததாக கூறப்படுகிறது. இதைக்காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
தல அமைப்பு:
இத்திருக்கோவில் கருவறையில் மூலவராக சுப்பிரமணிய சுவாமி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், நவக்கிரகங்கள் முதலான தெய்வங்கள் தனி சந்நிதிகளில் அருள்கின்றனர்.
திருவிழா:
ஆடிக்கிருத்திகை, தைக்கிருத்திகை, கிருத்திகை கந்த சஷ்டி, வைகாசி விசாகம், , பங்குனி உத்திரம், கிருத்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
நேர்மறை ஆற்றல் அதிகரிக்க, கேட்டது கிடைக்க, தொழில் சிறக்க, வினைகள் தீர
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்
கேட்டது கொடுத்திடும் ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் வேடந்தாங்கல் சுப்பிரமணிய சுவாமியை உளமாற வணங்கி நற்பலன்கள் பெறுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 599 நேர்மறை ஆற்றலை அள்ளித் தரும் ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் வேடந்தாங்கல் சுப்பிரமணிய சுவாமி
படம் 2 - 599 கேட்டது கொடுத்திடும் ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் வேடந்தாங்கல் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 27 அடி உயர சுப்பிரமணிய சுவாமி சிலை
Comments
Post a Comment