கோவில் 597 - பெங்களூர் பசவங்குடி வி வி புரம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻                                                                                                                                                       தினம் ஒரு முருகன் ஆலயம்-597

நோய்களை குணமாக்கும் பெங்களூர் பசவங்குடி வி வி புரம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

26.1.2023 வியாழன்

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

பார்வதிபுரம்

வி வி புரம் (விஸ்வேஸ்வரபுரா)

பசவங்குடி

பெங்களூர்-560004

கர்நாடகா

இருப்பிடம்: பெங்களூர் KSR ரயில் நிலையம் 5 கிமீ


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை


தலமகிமை:

கர்நாடகா மாநிலம் தலைநகர் பெங்களூர் KSR ரயில் நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ள பசவங்குடி வி வி புரம் (விஸ்வேஸ்வரபுரா) பகுதியில் உள்ள பார்வதிபுரத்தில் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வான சமேதராக அருளுவது சிறப்பம்சம். பேருந்து மற்றும் மெட்ரோ போக்குவரத்து வசதிகள் உள்ளன.

நோய்வாய் பட்டவர்கள் சுப்பிரமணிய சுவாமியை செவ்வாய், விசேஷ தினங்களில் வழிப்பட்டால், நோய்கள் உடனடியாக அகன்று குணமடைகின்றனர். 88 வருடங்களாக ஜூன் முதல் தேதியன்று வருஷாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு செவ்வாய் தோறும் அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றனர்.


தல வரலாறு:

இக்கோவில் சுமார் 90 ஆண்டுகள் வரலாறும் முக்கியத்துவம் வாய்ந்த பழமையான திருக்கோவிலாகும். இக்கோவில் ஸ்ரீ சஜ்ஜன் ராவ் என்பவரால் கட்டப்பட்டதாகும். முகப்பெருமானின் வெள்ளி ரதம் மிகவும் சிறப்பு பெற்றது.


தல அமைப்பு:

திருக்கோவில் கருவறையில் சுப்பிரமணிய சுவாமி வேல் ஏந்தி வள்ளி, தெய்வானையுடன் பொலிவான தோற்றத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் இடப்புறம் விநாயகப்பெருமான் வலப்புறம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள், கிருஷ்ண பகவான், சண்டிகேஸ்வரர், ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள், காலபைரவர் முதலான முக்கிய தெய்வங்கள் தனி சந்நிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

திருக்கார்த்திகை, சம்ப சஷ்டி, தீபம், சஷ்டி, செவ்வாய், ஜூன் 1 (வருஷாபிஷேகம்), மகர சங்கராந்தி, மார்கழி பூஜை


பிரார்த்தனை:

நோய்கள் குணமாக, தொழில் வளம் மேம்பட, நேர்மற சிந்தனை பெருக, வாழ்க்கை செழிக்க, திருமணம் வேண்டி


நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்


திறக்கும் நேரம்:-

காலை 7-11 மாலை 4.30-7.30 (காலை, மாலை 1 மணி நேரம் கூடுதல் நேரம்)


தொழில் வளம் மேம்பட அருளும் பெங்களூர் பசவங்குடி வி வி புரம் சுப்பிரமணிய சுவாமியை போற்றி பாடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻



படம் 1 - 597 நோய்களை குணமாக்கும் பெங்களூர் பசவங்குடி வி வி புரம் சுப்பிரமணிய சுவாமி



படம் 2 - 597 தொழில் வளம் மேம்பட அருளும் பெங்களூர் பசவங்குடி வி வி புரம் சுப்பிரமணிய சுவாமி வெள்ளி ரத உலா

Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்