கோவில் 594 - நீலகிரி வெல்லிங்க்டன் முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-594
நேர்மறை எண்ணங்களை உண்டாக்கும் நீலகிரி வெல்லிங்க்டன் முருகன் கோவில்
23.1.2023 திங்கள்
அருள்மிகு முருகன் திருக்கோவில்
வெல்லிங்க்டன்-643231
குன்னூர்
நீலகிரி மாவட்டம்
இருப்பிடம்: குன்னூர் 4 கிமீ, ஊட்டி 17 கிமீ
மூலவர்: முருகன்
தலமகிமை:
நீலகிரி மாவட்டம் குன்னூரிலிருந்து 4 கிமீ தொலைவில் சிறப்பு மிக்க ராணுவ கல்லூரி (MRC) இருக்கும் வெல்லிங்க்டன் பகுதியில் நேர்மறை எண்ணங்களை உண்டாக்கும் அழகிய முருகன் கோவில் அமைந்துள்ளது. முருகப்பெருமான் இக்கோவிலில் பொலிவுடன் காட்சியருள்வது சிறப்பம்சமாகும். இந்திய ராணுவப் படையினரால் இக்கோவில் சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. உள்ளூர் பக்தர்கள் மட்டுமல்லாது இங்கு சுற்றுலா பயணிகளாக வரும் அனைத்து மதத்தினரும் இந்த அழகிய முருகனை வழிபட்டு எல்லா நலன்களும் பெற்று செல்வது சிறப்பு. காலையிலிருந்து மாலை வரை திறந்திருக்கும் இக்கோவிலில் அனைத்து முருகனுக்குரிய திருவிழாக்கள், பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன.
தல வரலாறு:
எம் ஆர் சி கால்பந்து அணியினர் (MRC- Madras Regiment Centre) துராந்த் கோப்பை வென்றதன் நினைவாக வெல்லிங்க்டன் முருகன் கோவில் கோவில் கட்டப்பட்டதாக கூறுகின்றனர்.
தல அமைப்பு:
அழகிய திருக்கோவிலில் நுழைவு வாயிலில் நவக்கிரகங்கள் அருளுகின்றனர். அடுத்து வெள்ளை பளிங்கினாலான சிவலிங்கமும் எதிரே வெள்ளை பளிங்கினாலான நந்தியம் பெருமானும் அருள்பாலிக்கின்றனர். அழகாக வடிவமைக்கப்பட்ட கருவறையில் முருகப்பெருமான் வேல் தாங்கி, சேவற்கோடி ஏந்தி நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். இடப்புறம் விநாயகபெருமானும், வலப்புறம் அம்பாளும் வீற்றிருந்து அருளுகின்றனர். மேலும் துர்க்கை, கிருஷ்ணர், ஐயப்பன், நாகர், சாய்பாபா முதலான தெய்வங்களும் அருளுகின்றனர். கோவில் வளாகத்தில் திறந்த வெளியில் மயி பின் நிற்க வேல் தாங்கிய முருகன் சிலை உள்ளது.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம்
பிரார்த்தனை:
நேர்மறை எண்ணங்கள் உண்டாக. மன அமைதி கிடைக்க, கேட்ட வரம் அருள
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்
திறக்கும் நேரம்:
காலை முதல் மாலை வரை
மன அமைதி கிடைக்க அருளும் நீலகிரி வெல்லிங்க்டன் முருகனை மனமுருகி பிரார்த்திப்போம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 594 நேர்மறை எண்ணங்களை உண்டாக்கும் நீலகிரி வெல்லிங்க்டன் முருகன்
படம் 2 - 594 மன அமைதி கிடைக்க அருளும் நீலகிரி வெல்லிங்க்டன் முருகப்பெருமான்
Comments
Post a Comment